''கூட்டு முயற்சி ( TEAM WORK)"

பல நேரங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால் தான் நடந்ததாக நினைக்கின்றனர். ஆனால்!, மற்றவர்களின் ஒரு பங்களிப்பு இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது.

ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாக செய்யப்படும் வேலையை விட குழுவாக செய்யப்படும் வேலையே சிறப்பானது.

ஏனெனில்!, கூட்டு முயற்சியின் பலன் அளப்பறியது, குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும் போது நமக்கு சகிப்புத்தன்மை, மற்றும் பலவித சூழ்நிலைகளைக் கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்.

கோடைகாலத்தில் ஒருநாள் அச்சிறு நகரத்தின் மேயர் ஒரு சிறுவன் மிகப் பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றைப் பறக்க விடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராகப் பறந்தது.

அது அடுத்த நகரத்தில் இருப்பவர்களுக்குக் கூடத் தெரிந்திருக்கும் வகையில் உயரமாகப் பறந்தது. பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு நகரத்தில், அந்த அழகான காற்றாடிக்கு “நகரத்தின் சாவி” எனும் பட்டத்தை வழங்க விரும்பினார் நகர முதல்வர் (மேயர்). இந்தக் காற்றாடிப் பறந்ததற்கு யார் பொறுப்பு...? என மக்களிடம் கேட்டார்.

"நான் தான்” என்றான் ஒரு சிறுவன். “நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதைப் பறக்க வைத்தேன்” என்றான் அவன்.

ஆனால் காற்றோ!, "நான் தான் காற்றாடி பறந்ததற்குப் பொறுப்பு” என்றது. என்னுடைய ஓட்டமே காற்றாடியை சீராகவும், சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தாவிட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதைப் பறக்க வைத்தேன்” என்றது காற்று.

இல்லை!, நான் தான் காற்றாடிப் பறந்ததற்கு பொறுப்பு” என்றது காற்றாடியின் வால், நான் தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாகப் பறக்கவும் காரணம். நான் இல்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடு இல்லாமல் சுற்றித் தரையில் விழுந்து இருக்கும். அதை அந்தச் சிறுவனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே!, நானே அதைப் பறக்க வைத்தேன்” என்றது அந்த காற்றாடியின் வால்...

இப்போது நீங்களே கூறுங்கள், யார் உண்மையில் காற்றாடியைப் பறக்க வைத்தவர்கள்...?

ஆம் நண்பர்களே...!

எந்தவொரு செயலையும், "நான் தான் செய்தேன்", "என்னால் தான் அந்த செயல் செய்யப்பட்டது" என்று தன்னைப் பற்றி பெருமை கொள்ளாமல், நாங்கள் அல்லது எங்களது கூட்டு முயற்சியால் சாதித்தோம் அல்லது செய்யப்பட்டது போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டும்...!

 நிர்வாகவியலார்கள் இதைத் தான் கூட்டு முயற்சி (Team Work) என்பார்கள். தன் முயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும்...!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.