உடல் சூட்டை குறைக்க சில குறிப்புகள்.

பொதுவாக உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.  இந்த சூட்டின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்படும். அதில் முக்கியமானது நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வெப்பம். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம். இக்காலத்தில் தான் பலருக்கும் அடிக்கடி உடல் சூடு பிடித்துக் கொள்ளும்.

இப்படி உடலின் வெப்பம் அதிகரித்தால், அதனால் வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் , கண் எரிச்சல் போன்ற உணர்வுகளை சந்திக்க நேரிடும்.

எனவே இந்த உடல் சூட்டைக் குறைப்பதற்கு ஒரு சில வைத்தியங்கள் உள்ளன. அதை அன்றாடம் கோடைக்காலத்தில் பின்பற்றினால், உடல் சூட்டில் இருந்து விடுபடலாம்.

வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமாக வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் கண்டிப்பாக அதிகரிக்க வேண்டும்.

ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதை சூடு செய்யவேண்டும். எண்ணெய் சிறிது சூடான உடன் அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகை போட்டு சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு எண்ணெயை ஆறவைத்து வலது மற்றும் இடது காலின் பெருவிரல் நகத்தின் மேல் மட்டும் இந்த எண்ணெயை தடவ வேண்டும். சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து எண்ணெயை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் உடல் சூடு குறையும். 

அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வெந்தயத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொண்டு வாயில் போட்டு, தண்ணீர் குடித்து விழுங்க வேண்டும். இப்படி தினமும் கோடையில் செய்து வந்தால், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

கோடையில் உடல் வறட்சியடையாமலும், குளிர்ச்சியுடனும் இருக்க இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே கோடைக்காலத்தில் தவறாமல் தினமும் 2 இளநீரைப் பருகுங்கள்.

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வர, அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.

பசலைக்கீரை, வெள்ளரிக்காய், காலிபிளவர், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். அதே போல நாட்டு வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்.

கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக் காணலாம்.

ஒரு கையளவு சோம்பை எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

கோடையில் தெருவின் மூலைமுடுக்குகளில் கரும்பு ஜூஸ் விற்பதைக் காண்பீர்கள். இந்த கரும்பு ஜூஸை குடிப்பதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல விடுதலைக் கிடைக்கும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

உடல் வெப்பத்தைக் குறைக்க சிறந்த பானம் என்னவென்று நீங்கள் யோசித்தால், அது பால் மற்றும் தேன் கலவை தான். ஆம் வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உடல் வெப்பம் தணியும்.

சந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து, நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். வேண்டுமானால், சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், இம்முறையைத் தவிர்க்கவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.