தர்பூசணியை சாப்பிட்டதும் இதை உட்கொள்ள கூடாதாம்!

கோடைக்காலத்தில் தர்பூசணி பழத்தை தவறாமல் சாப்பிட்டு வந்தால் அதிகம் சந்திக்கும் நீரிழப்பு பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

தர்பூசணி ஏராளமான சத்துக்களை கொண்டது என்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளும் கிடைக்கும்.

தர்பூசணி ஆரோக்கியமான பழமாக இருந்தாலும் அந்த பழத்தை தவறான உணவுகளுடன் சேர்த்து உட்கொண்டால் அது உடலுக்கு பல்வேறு தீமைகளை விளைவிக்கும்.

முக்கியமாக தர்பூசணி பழத்தை சாப்பிட்ட உடனேயே ஒருசில உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது அதன் விளைவாக வயிற்று உப்புசம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படும்.

தர்பூசணியால் கிடைக்கும் நன்மைகளும் தடைபடும். எனவே தர்பூசணிப் பழத்தின் முழு நன்மைகளைப் பெற விரும்பினால் அப்பழத்தை சாப்பிட்டதும் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பதை தெரிந்து கொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும். 

📌பால் குடிக்கக்கூடாது

தர்பூசணி பழத்தை சாப்பிட்டதும் பால் குடித்தால் அது உடலுக்கு பல வழிகளில் தீங்கை விளைவிக்கும்.

எப்படியெனில் தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது இந்த வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொண்டதும் பாலைக் குடித்தால் அது ஒன்றுடன் ஒன்று வினைபுரிந்து வயிற்றில் உள்ள பால் திரிந்து வயிற்று உப்புசத்தை உண்டாக்கும்.

இது தவிர இது செரிமான மண்டலத்திற்கு தீங்கு விளைவித்து, அஜீரண கோளாறையும் உண்டாக்கும்.

📌புரோட்டீன் உணவுகள் கூடாது

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை சாப்பிட்டதும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

தர்பூசணியில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. அதோடு சிறிது ஸ்டார்ச்சும் உள்ளன.

எனவே தர்பூசணி உட்கொண்டதும் புரோட்டின் உணவுகளான பருப்பு வகைகளை உட்கொள்ளும் போது அது வயிற்றில் உள்ள செரிமான நொதிகளை சேதப்படுத்தி வயிற்றின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.

📌முட்டை சாப்பிடக்கூடாது

தர்பூசணிப் பழத்தை சாப்பிட்டதும் முட்டை சாப்பிட்டால் அது பல்வேறு வயிற்று பிரச்சனைகளை வரவழைக்கும்.

முட்டையில் புரோட்டீன் இருப்பது மட்டுமின்றி ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன மற்றும் தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

எனவே இவ்விரண்டையும் ஒன்றாக அல்லது அடுத்தடுத்து உண்ணும் போது அது செரிமானத்தை பாதிப்பதோடு, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்றவற்றையும் உண்டாக்கும். 

📌தண்ணீர் குடிக்கக்கூடாது

தர்பூசணி சாப்பிட்டதும் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை.

ஆனால் ஆயுர்வேதத்தின் படி தர்பூசணி சாப்பிட்டதும் நீரை குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால் அது இரைப்பைக் குடலைப் பாதிக்கும்.

தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி சர்க்கரையும் உள்ளது. பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிர்கள் சர்க்கரை மற்றும் ஈரப்பதமான பகுதியில் நன்கு வளர்ச்சி அடையும்.

எனவே தர்பூசணி சாப்பிட்டதும் நீரை குடிக்கும் போது அது இரைப்பை குடல் பாதையில் நுண்ணுயிர்கள் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

எனவே தான் தர்பூசணி சாப்பிட்டதும் நீர் குடிக்கக்கூடாதென ஆயுர்வேதம் கூறுகிறது. 

📌இரவு தூங்கும் முன் சாப்பிடக்கூடாது

தர்பூசணியை இரவு நேரத்தை சாப்பிடக்கூடாது. இரவு நேரத்தில் நமது செரிமான மண்டலம் மெதுவாக செயல்படும்.

இந்நிலையில் நீர்ச்சத்துள்ள மற்றும் சர்க்கரை நிறைந்த தர்பூசணியை உட்கொள்ளும் போது, அதை ஜீரணிக்க செரிமான மண்டலம் சிரமப்படும்.

இது தவிர இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தின் காரணமாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திரிக்க வேண்டியிருக்கும்.

எனவே தர்பூசணியை சாப்பிட சிறந்த நேரம் பகல் வேளை தான். அதுவும் காலை உணவின் போது உட்கொள்வது மிகவும் நல்லது.

எனவே இனிமேல் தர்பூசணி சாப்பிட்டால் மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உடனே சாப்பிட வேண்டாம்.

ஒருவேளை சாப்பிடுவதாக இருந்தால், குறைந்தது 30 நிமிடம் கழித்த பின்னரே உட்கொள்ள வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.