ஒருவரின் உருவத்தை வைத்து.

எப்போதும் நாம் ஒரு பொருளை, அல்லது மனிதர்களின் உருவத்தை வைத்தே எடை போடுகிறோம்...

அது மிகவும் தவறானது. ஒருவரின் உடலையோ!, அவர் அணிந்திருக்கும் உடையை வைத்தோ எடை போடக் கூடாது...

அவருடைய செயலைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். அவர் உருவத்தை வைத்து அல்ல...

இந்தக் கதையை வாசியுங்கள்...

ஒரு அழகான பெண், ஒரு விமானத்தில் ஏறினார். தனது இருக்கையை தேடிச் சென்ற போது, தனக்கு ஒதுக்கிய இருக்கைக்கு அடுத்த இருக்கையில் இரண்டு கையையும் இழந்த ஒருவர் அமர்ந்திருந்தார்...

அவரைக் கண்டதும் அந்தப் பெண்ணுக்கு அருவருப்பாக இருந்திருக்கிறது. இந்த நபர் அருகில் நாம எப்படி அமர்ந்து பல மணிநேரம் பயணம் செய்வது...? என்று தயங்கிய அந்தப் பெண்.,

விமான பணிப்பெண்ணை அழைத்து,, எனக்கு வேறு இடத்தில் இருக்கைக்கு ஏற்பாடு செய்யுங்கள் எனக் கேட்டார்...

அதற்கு விமான பணிப்பெண், "ஏன் உங்களுக்குத் தான் இருக்கை ஏற்கனவே ஒதுக்கி இருக்கிறதே" என்றார்...

அதற்கு அந்தப் பெண், "எனக்கு அவர் அருகில் அமர்ந்து பயணிக்க அருவருப்பாக இருக்கிறது. அதனால் தான் வேறு இருக்கை கேட்டேன் என்றார்...

விமான பணிப்பெண் அதிர்ச்சியடைந்தார். காண்பதற்கு நல்ல படித்தவர் போல இருக்கிறார்கள். ஆனால்!, கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் பேசுகிறார்களே என்றெண்ணினார்...

அதை வெளியே காட்டிக் கொள்ளாமல். சற்று நேரம் பொறுங்கள், நான் போய் வேறு இருக்கை இருக்கின்றதா...? என்று பார்த்து வருகிறேன் என்று கூறிச் சென்றார்..

சற்று நேரத்தில் திரும்பி வந்து, ''நீங்கள் எடுத்திருக்கும் பயணச்சீட்டு வணிக வகுப்பு ( எக்கானமிக் கிளாஸ்) ஆனால்! எக்கானமிக் க்ளாசில் உங்களுக்கு ஒதுக்குவதற்கு வேறு இடமில்லை...

முதல் வகுப்புப் பிரிவில் மட்டும் தான் ஒரு இருக்கை இருக்கிறது. ஆனாலும்!, நீங்கள் எங்களது மதிப்பு வாய்ந்த பயணி. உங்களது கோரிக்கையையும் ஆய்ந்தறியாமல் நாங்கள் இருக்க முடியாது...

அதனால், எங்கள் பயண வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு வணிக வகுப்புப் (எக்கானமி கிளாஸ்) பயணி ஒருவருக்கு முதல் வகுப்பு இருக்கையில் ஒதுக்குகின்றோம். சற்று பொறுமையாக இருங்கள்" என்று கூறியதும் அந்தப் பெண்மணிக்கு மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... 

விமானப் பணிப்பெண்ணின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல், முதல் வகுப்பிற்கு செல்லத் தயாரானார்கள்.. ஆனால்!,அங்கு நடந்ததது வேறு...

விமான பணிப்பெண் நேராக அந்த இரண்டு கைகளையும் இழந்தவரிடம் சென்று,

"அய்யா!, தயவுசெய்து மன்னித்துக் கொள்ளுங்கள்.

உங்களது பயணப் பொருட்களை எல்லாம் நான் எடுத்துக் கொண்டு வருகிறேன்..."

நீங்கள் முதல் வகுப்பிற்கு வாருங்கள், உங்கள் அருகில் இவர்களைப் போல ஒருவரை அமர வைக்க எங்களுக்கு மனமில்லை" என்று பணிவாகக் கூறியதும், விமானத்தில் இருந்த அனைவரும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்...

அந்தக் கைகளை இழந்தவர் எழுந்து,

"நான் ஒரு பணி ஓய்வு பெற்ற இராணுவ வீரன், போரில் என்னுடைய இரண்டு கைகளையும் இழந்து விட்டேன், முதல் முறையாக இந்தப் பெண் கூறியதைக் கேட்டதும், இவர்களைப் போல உள்ளவர்களுக்காகவா இரவென்றும், பகலென்றும் பாராமல் பல இன்னல்களுக்கு இடையில் போரில் ஈடுபட்டோம் என்று நினைத்து மிக வருத்தமாக இருந்தது...

ஆனால்!, இப்போது நீங்கள் எல்லாரும் கைதட்டி ஆராவாரம் செய்வதைப் பார்த்த போது மனசுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது...

மற்றும், உங்களைப் போன்ற நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியபடி, முதல் வகுப்பை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார்...

அந்தப் பெண்மணியோ அவமானத்தின் உச்சிக்கே சென்று விட்டார்....

யாரையும்  ஏறிட்டுப்ப் பார்க்கும் திறனின்றி தலையைக் குனிந்து உட்கார்ந்து விட்டார்...

ஆம் நண்பர்களே...!

நாம் எப்போதும் அடுத்தவர்களைப் பற்றி எடை போட்ட வண்ணம் இருக்கிறோம். நம்மையும் பிறர் எடை போடுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை...!

நம்மைப் போல் தான் மற்றவர்களும் பிறர் மீது நல்ல எண்ணமோ, கெட்ட எண்ணமோ கொண்டு இருப்பார்கள் என்று நாம் நினைத்துப் பார்ப்பது இல்லை...!!

 அழகு என்பது உருவத்தில் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒருவரின் குணமும், அவரது செயலும் தான் அவர் எப்படிப்பட்டவர் என்று தீர்மானிக்கிறது...!!!

அழகு என்பது நாம் பார்க்கின்ற வெளித்தோற்றத்தில் இல்லை. அது மனம் தொடர்புடையது. அது நம் நடத்தையில் தான் வெளிப்படும். அதை உணர்ந்து நடப்பதற்கு முயற்சி செய்வோம்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.