மலட்டுத்தன்மை! ஆண்கள் என்ன சாப்பிடலாம்? எதை தவிர்க்க வேண்டும்?

கடந்த சில ஆண்டுகளாகவே செயற்கை கருத்தரிப்பு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவருமே கவனித்திருப்போம்.

குழந்தை பெறுவதில் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை பற்றி மட்டுமே பேசுகிறோமே தவிர ஆண்கள் தொடர்பான பிரச்சனைகளை பற்றி யோசிப்பதுகூட இல்லை.

குழந்தை பெறுவதில் சிக்கல் என்றவுடனேயே பெண்களின் கருப்பை தொடர்பானவை பற்றியே சிந்திக்கிறோம், ஆனால் ஆண்களுக்கும் இதற்கு பங்கு உண்டு என்பதை பற்றி பேசுவதில்லை.

கருத்தரிப்பதில் மனிதர்களுக்கு உள்ள சிக்கல்களில் பாதியளவுக்கு ஆண்களும் பங்கு வகிக்கிறார்கள்.

ஆண்களின் விந்தணுக்கள் குறைவாக இருப்பதும், கருவை உருவாக்க முடியாத அளவுக்கு திறன் குறைந்து காணப்படுவதும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், டெஸ்டோஸ்டிரோன் எனும் ஹார்மோன் உற்பத்தி குறைதல், ரசாயன பொருட்கள் என பல்வேறு காரணிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படியான சூழலில் என்ன உணவுகளை சாப்பிடலாம் எதை தவிர்க்க வேண்டும் என்பதெல்லாம் குறித்து தெரிந்து கொள்வோம்.

Human Reproduction Updateன் சமீபத்திய ஆய்வின் படி கடந்த 45 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை 51 சதவிகிதம் குறைவடைந்து விட்டதாக தெரியவந்துள்ளது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், ரசாயனங்களின் பயன்பாடும் இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டாலும், சரியான அளவில் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் மட்டுமே மலட்டுத்தன்மையிலிருந்து தப்பிக்கலாம்.

📌என்ன சாப்பிட வேண்டும்?

காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும், பச்சை நிற காய்கறிகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன்களை உணவாக உட்கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள டயட்டுகளை பின்பற்றும் போது Testosterone ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

Testosterone ஹார்மோன் உற்பத்தியில் Zinc முக்கிய பங்காற்றுகிறது, கோழி இறைச்சி, பூசணிக்காய் விதைகள், பசலைக்கீரை போன்றவற்றில் Zinc அதிகம் இருப்பதால் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வது பலனை தரும்.

இதுதவிர ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் உள்ள பெர்ரி, நட்ஸ், கொய்யா, வாழைப்பழம், அவகோடா மற்றும் சிட்ரஸ் அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றையும் எடுத்துக்கொள்வது பலனை தரலாம்.

📌எதை தவிர்க்க வேண்டும்?

மறந்தும்கூட பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம், இதில் Trans-fatsகள் அதிகம் இருப்பதுடன் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்கள் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையும் குறைத்துவிடுகிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி அடிக்கடி உட்கொள்வதை தவிர்க்கவும்.

புகைப்பிடிப்பதும், பான், குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதும் மலட்டுத்தன்மையை அதிகரிக்கலாம், எனவே இவற்றை தவிர்ப்பதும் அவசியமாகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.