தூக்கம் வரவேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்க!

சீரற்ற தூக்கம் என்பது ஆரோக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கிறது.

இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படுகின்றீர்களா? தூக்கமானது நமது தினசரி வாழ்வில் மிகவும் அவசியமானதாகும். அதை சீராக செய்யவில்லை என்றால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல தீமைகள் ஏற்படும். 

ஆகவே இதை தடுத்து, நிம்மதியான ஒரு தூக்கத்தை பெற்றுக்கொள்ள நினைத்தால் இந்த உணவுகளை தினமும் உட்கொள்ளுங்கள்.

மாலையில் காபின் கலந்த உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

நல்ல தூக்கத்தை வரவழைப்பதற்கு சாக்லேட், குளிர்பானம் மற்றும் உற்சாக பானங்களை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மூன்று வேளைகளில் சாப்பிடுபவர்கள் அதற்கு பதிலாக அதை பிரித்து, ஐந்து முறைகள் சாப்பிடலாம். அது எடை குறைப்பு மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும்.

முட்டைக்கோஸ், வெங்காயம் போன்ற காய்கறிகள் இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

இரவில் இறைச்சியை விரும்பி சாப்பிடுபவர்கள் அதற்கு பதிலாக புரதம் நிறைந்து மீனை சாப்பிடலாம்.

அது தூக்கத்திற்கும் உகந்தது. தூங்க செல்வதற்கு முன்பு காரமான உணவுகளை உட்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

நள்ளிரவில் பசி வருவதும் அதற்காக நேரம் தெரியாமல் நள்ளிரவில் சாப்பிடுவதும் உடல் நலத்திற்கு தீங்கு தரும். அதோடு தூக்கத்தையும் குறைக்கும்.

பாலுடன் தேன் சேர்த்து பருகலாம் அல்லது தின்பண்டங்கள் ஏதாவது சிறிதளவு சாப்பிடுவது நல்லது.  

மேலும் உணவுகளை சீராக உட்கொண்டாலுமே படுக்கை அறையை சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியமாகும். அத்தோடு வெளிச்சம் உள்ளதாகவும் இருள் இல்லாதவாரும் அமைக்க வேண்டும்.         

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.