காசநோய் உள்ளவர்கள் எதை அதிகம் சாப்பிட வேண்டும்?

காசநோய் ஒரு அபாயகரமான நோயாகும். இதற்கு ஒழுங்கான சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இது தீவிரமான ஒரு பிரச்சினைக்கு கொண்டு வந்து விடும் என் வைத்தியர்கள் கூறுகின்றார்கள்.

ஒவ்வொரு நோயை தடுப்பதற்கும் உடம்பிற்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி அதிகம் தேவை.

அதுபோலவே இந்த நோயில் இருந்து உடலை பாதுகாத்துக்கொள்ள ஒரு சில உணவுகளை நாம் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு நாம் என்ன உண்ண வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இந்த பதிவை வாசியுங்கள்.

❇️ காசநோய்க்கான அறிகுறிகள்

👉தொடர்ச்சியான இருமல்

👉எடை குறைவு

👉பலவீனம்

👉மூச்சு விடுவதில் சிரமம்

📌பழங்கள்

வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்த பழங்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.  

மாம்பழம், பப்பாளி, கொய்யா, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

📌பூண்டு

தினமும் காலையில் 2-3 பற்கள் பூண்டு சாப்பிட்டால், காசநோய் உண்டாக்கும் கிருமிகளை நேரடியாக தாக்கும் திறன் அதிகமாக உள்ளது. 

📌பால்

பாலில் புரோட்டீன் அதிகம் உள்ளது. காசநோயாளிகள் பாலை தினமும் குடிப்பதால், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், உடலின் வலிமையும் மேம்படும்.

📌காய்கறிகள்

கேரட், தக்காளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் நல்லது. 

📌க்ரீன் டீ

காபி மற்றும் டீ குடிப்பதை நிறுத்திவிட்டு க்ரீன் டீ குடித்தால் நல்லது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.