ஏற்றங்களும், இறக்கங்களும்.

வாழ்க்கை என்றால் வேதனைகளும், சோதனைகளும் இருக்கத் தான் செய்யும். துன்பம் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும்...

ஆம்!, வாழ்க்கை என்பது ஒரு போராட்டம், எதிர்நீச்சல் போடத் தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்..

வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கில்லை. அதில் மேடு பள்ளமும், சுழியும் பாறைகளும் நிறைந்து தான் இருக்கும்...

வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்லும் மனிதன் சுழியில் அமிழ்ந்து விடாமலும், பாறையில் மோதி விடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பைப் பயன்படுத்த வேண்டும்...

பேரறிஞர் பெர்னாட்சாவிடம் ஒருவர் வந்து,

'நான் பத்து முயற்சி செய்தால் ஒன்று தான் கைகூடுகின்றது. பத்தும் பலன் தர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்...?" என்று கேட்ட போது. நீ நூறு முயற்சிகள் செய். பத்தும் பலன் தரும் என்றார்...

ஆம் நண்பர்களே...!

🟡 நன்கு வசதியாக வாழும் நாட்களிலேயே துன்பமான காரியங்களையும் பழகக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்!, வாழ்க்கையில் ஏற்றமும் இறக்கமும் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறி, மாறி வருவது இயல்பு. ஆகையால்!, அனைத்து சூழல்களுக்கும் நம்மைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது...!

🔴 வெற்றி பெற்ற மனிதர்களுக்குப் பின்னால் தோல்வி முகங்கள் பல உண்டு, இன்பங்களும், துன்பங்களும், வருத்தங்களும், மகிழ்ச்சிகளும், வெற்றிகளும், தோல்விகளும், ஏற்றங்களும், இறக்கங்களும், மேடுகளும், பள்ளங்களும் கலந்தது தான் வாழ்க்கை...!!

⚫ வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம் என்ற இரண்டு மட்டும் இல்லை, இருந்த இடத்திலேயே அதாவது ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் இருந்த இடத்திலே இருப்பதும் ஒரு நிலையாகும். ஏற்றம் அடைவது மட்டும் சாதனையல்ல; இன்றைய வேகமான, போட்டி மிகுந்த, போராட்டம் மிகுந்த வாழ்க்கைச் சூழலில் வீழ்ச்சியடையாமல் இருப்பதும் ஒரு சாதனை தான்...!!!

🔘 இந்தக் கோரோனா தீநுண்மியின் காலம் அதையும் நமக்கு உணர்த்தி வருகிறது. இருக்கும் நிலையை விட கீழே சென்று விடாமல், வீழ்ச்சியடைந்து விடாமல் நம்மைக் காப்பாற்றிக் கொள்வதும் சாதனையாகவே கருதப்பட வேண்டும். ஏற்றம் வந்தாலும், சரிவு வந்தாலும் ஒரே தன்மையுடன்  அவைகளை ஏற்றுக் கொண்டு, வாழ்வில் வெற்றி காண வேண்டும்...!

 உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.