சந்தேகம் என்னும் நோய்.

உடலில் ஏற்படும் நோயை குணப்படுத்த மருந்து உண்டு. ஆனால்!, மனதில் ஏற்படும் "சந்தேகம் என்னும் நோய்" தீர்க்க முடியாத ஒன்று. ஒருமுறை சந்தேகம் வந்து விட்டால் அது பல உறவுகளுக்கு கொள்ளிக்கட்டையாக அமைந்து விடும். நீங்கள் நூறு விழுக்காடு  அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால், அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது எப்போதும் சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கும்...!

இது காதலுக்கும்  , நட்புக்கும், வேலை செய்யும் இடத்தில் இருக்கும் முதலாளி, தொழிலாளி உறவுகளுக்கும் பொருந்தும்.

எப்போதும் எல்லோரிடமும் நூறு விழுக்காடு அன்பைக் காட்டுங்கள். சந்தேகம் ஒன்று வந்து விட்டால் நிம்மதி போய் விடும், சந்தேகம் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்காது.

ஒரு குட்டிப் பெண்ணும் குட்டிப் பையனும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.அந்தப் பையன் கைகளில் நிறைய பொம்மைகளும் அந்தக் குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.

அந்தப் பையன் சொன்னான்,

''எம்மிடம் இருக்கின்ற பொம்மைகள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன். பதிலாக நீ வைத்திருக்கிற இனிப்புகள் எல்லாவற்றையும் எனக்குத் தருகிறயா...? என்று கேட்டான்.

குட்டிப் பெண்ணும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தாள்.அந்தப் பையன் தன்னிடம் உள்ள நல்ல பொம்மையை ஒளித்து வைத்து விட்டு அந்தக் குட்டிப் பெண்ணிடம் இனிப்புகளைக் கேட்டான்.

குட்டிப் பெண் எல்லா இனிப்புகளையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிக் கொண்டாள்.

அன்று இரவு அந்தக் குட்டிப் பெண் நிம்மதியாக உறங்கினாள். அந்தப் பையனுக்கு உறக்கமே வரவில்லை.

அவள் எல்லா இனிப்புகளையும் நம்மிடம் கொடுத்திருப்பாளா...? இல்லை!, நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா...? என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் அவதியுற்றான்.

சந்தேகம் ஒருவர் மனதைப் பற்றிக் கொண்டால், அது மன நோயாக மாறி விடுகிறது.

ஆம் நண்பர்களே...!

🟡 சந்தேக மனப்பான்மை கொண்டவர்கள், தன்னால் அதை செய்ய முடியமா...? இதைச் செய்ய முடியுமா...? என்று சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்...!

🔴 ஒரு வீட்டில் சந்தேகம் முன் வாசலால் வந்தால், மகிழ்ச்சி பின் வாசலால் போய் விடும் என்பார்கள்...!!

⚫ ஆம்!, இன்று சந்தேகம் என்ற மனநோய்  சமூகத்தில் நிலவி வரும் ஒரு நச்சுக் கிருமி. அது ஊடுருவி உயிரையே கொன்று விடும்...!!!

- உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.