வரலாற்றில் இன்று – 04.07.2023

ஜூலை 4 (July 4) கிரிகோரியன் ஆண்டின் 185 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 186 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 180 நாட்கள் உள்ளன.

📌இன்றைய தின நிகழ்வுகள்

1054 – சுப்பர்நோவா ஒன்று சீனர்களாலும், அரபுக்களாலும் அவதானிக்கப்பட்டது.

1054 – எஸ்என் 1054 என்ற சூப்பர்நோவா ஒன்று சீன, அரேபியர்களால் the விண்மீன் Zeta டார்சு விண்மீன் கூட்டத்தில் சேட்டா விண்மீனுக்கு அருகில் அவதானிக்கப்பட்டது.

1187 – சிலுவைப் போர்கள்: சலாகுத்தீன் யெரூசலம் நாட்டு மன்னன் லூசிக்னனின் கை எனபவனை வென்றான்.

1634 – நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது. இது பின்னர் கியூபெக் நகரமானது.

1636 – பிராவிடென்ஸ், றோட் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1776 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.

1803 – லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.

1810 – பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாம் நகரைப் பிடித்தனர்.

1826 – அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் தாமஸ் ஜெஃவ்வர்சன், 2ம் அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் இறந்த அதே நாளில் இறந்தார்.

1827 – நியூயார் மாநிலத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.

1837 – உலகின் முதலாவது அதி-தூர தொடர்வண்டிப் போக்குவரத்து, பர்மிங்காம், லிவர்பூல் நகர்களுக்கிடையே தொடங்கப்பட்டது.

1865 – ஆலிஸின் அற்புத உலகம் வெளியிடப்பட்டது.

1879 – ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.

1886 – சுதந்திரச் சிலை பிரெஞ்சு மக்கள் ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தார்கள்.

1892 – சமோவா தனது பன்னாட்டு நாள் கோட்டில் மாற்றங்களை ஏற்படுத்தியது. இதன்படி, இவ்வாண்டு 367 நாட்களை அது கொண்டது. திங்கட்கிழமை, சூலை 4 இரண்டு நாட்களாக இருந்தது.

1918 – ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்ஷெவிக்கினரால் கொல்லப்பட்டனர் (யூலியின் நாட்காட்டி).

1941 – நாசி ஜெர்மனியினரால் போலந்தில் “லூவோவ்” என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.

1946 – 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்சு ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1947 – பிரித்தானிய இந்தியாவை இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் முன்வைக்கப்பட்டது.

1951 – வில்லியம் ஷாக்லி இருமுனை சந்தி திரிதடையம் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார்.

1976 – என்டபே நடவடிக்கை: உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இசுரேலிய பாதுகாப்புப் படைகள் விடுவித்தனர்.

1988 – வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.

1997 – நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.

1998 – ஜப்பான் நொசோமி விண்கலத்தை செவ்வாய்க் கோளை நோக்கி அனுப்பியது.

2006 – டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.

2012 – இக்சு போசானை ஒத்த துணிக்கைகள் பெரிய ஆட்ரான் மோதுவியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்தது.

📌 இன்றைய தின பிறப்புகள்

1790 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சு புவியியலாளர் (இ. 1866)

1804 – நாதனீல் ஹாதோர்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1864)

1807 – கரிபால்டி, இத்தாலிய அரசியல்வாதி (இ. 1882)

1868 – ஹென்ரியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (இ. 1921)

1872 – கால்வின் கூலிஜ், அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் (இ. 1933)

1884 – சு. இராசரத்தினம், இலங்கை சைவ சமயப் பெரியார் (இ. 1970)

1898 – குல்சாரிலால் நந்தா, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1998)

1910 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை, பாடகி (இ. 2010)

1933 – கொனியேட்டி ரோசையா, ஆந்திரா அரசியல்வாதி

1956 – லட்சுமிகாந்த் பர்சேகர், இந்திய அரசியல்வாதி

1959 – விக்தோரியா அபுரீல், எசுப்பானிய நடிகை

📌 இன்றைய தின இறப்புகள்

965 – ஐந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை)

1826 – ஜான் ஆடம்ஸ், அமெரிக்காவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1735)

1826 – தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்காவின் 3வது குடியரசுத் தலைவர் (பி. 1743)

1831 – ஜேம்ஸ் மன்ரோ, அமெரிக்காவின் 5வது குடியரசுத் தலைவர் (பி. 1758)

1850 – வில்லியம் கிர்பி, ஆங்கிலேயப் பூச்சியியலாளர் (பி. 1759)

1896 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய எழுத்தாளர் (பி. 1850)

1902 – விவேகானந்தர், இந்திய சமயத் தலைவர் (பி. 1863)

1910 – ஜியோவன்னி ஸ்கையாபரெலி, இத்தாலிய வானியலாளர் (பி. 1835)

1926 – பியர் ஜார்ஜியோ ஃபிராசாதி, இத்தாலியப் புனிதர் (பி. 1901)

1934 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-போலந்து வேதியியலாளர் (பி. 1867)

1963 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் (பி. 1876)

1992 – கோவை மகேசன், ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1938)

📌இன்றைய தின சிறப்பு நாள்

ஐக்கிய அமெரிக்கா – விடுதலை நாள் (1776)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.