மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள் - எவரெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா

மஞ்சள் மருத்துவ குணம் நிறைந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் அதனை தமது வாழ்க்கையில் நாளாந்த தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

மஞ்சளில் மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும் உணவில் 3 கிராம் அளவுக்கு மட்டுமே அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சில பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சளை உணவில் சேர்ப்பது நல்லதல்ல எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு பிர்ச்சினை உள்ளவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பித்தப்பை பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் கோளாறு உள்ளவர்கள் மஞ்சள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தலாம். உணவு தவிர்த்த பிற ஆரோக்கிய, முக அழகு செயல்பாடுகளுக்கு மஞ்சளை தாராளமாக பயன்படுத்தலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.