தினமும் வால்நட்ஸை சாப்பிட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்குமாம்

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நட்ஸ்கள் பெரிதும் உதவுகின்றன. நட்ஸ்களில் பல வகைகளில் உள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான நன்மைகளை உடலுக்கு வழங்கும்.

அதில் மூளை போன்ற தோற்றத்தைக் கொண்ட நட்ஸ் தான் வால்நட்ஸ். வால்நட்ஸை பார்த்ததுமே பலருக்கும் சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் எழாது.

வால்நட்ஸில் ஏராளமான நுண்ணூட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புக்கள், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளன.

இவை அனைத்துமே உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்புக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும் இன்றியமையாதவை.

இப்படிப்பட்ட வால்நட்ஸை ஒருவர் தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் உடலில் பல அற்புதங்கள் நடக்கும். 

இதய ஆரோக்கியம் மேம்படும்

தற்போது இதய நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதய நோயின் அபாயத்தைக் குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வால்நட்ஸ் உதவி புரிவதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகளவில் உள்ளன.

இவை இதயம் சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது. மேலும் வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

இவை கெட்டகொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. 

📌மூளையின் செயல்பாடு மேம்படும்

மூளைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதாலோ என்னவோ, வால்நட்ஸ் மூளையின் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

இதற்கு இவற்றில் உள்ள அதிகளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தான் காரணம்.

இவை மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான சத்தாகும்.

ஆய்வுகளிலும் வால்நட்ஸை தினமும் உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் திறன் மேம்படுவதோடு, அல்சைமர் நோயின் அபாயம் குறைவது தெரிய வந்துள்ளது. 

📌எடை இழப்பை ஊக்குவிக்கும்

உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு வால்நட்ஸ் மிகச்சிறந்த ஸ்நாக்ஸ் ஆகும்.

ஏனெனில் இவற்றில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் புரோட்டீன், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புக்கள் போன்றவை அதிகம்.

எனவே வால்நட்ஸை ஸ்நாக்ஸ் வேளைகளில் உட்கொள்ளும் போது, அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து கண்ட உணவுகளை உட்கொள்வதைத் தடுக்கும்.

இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. 

📌இரத்த அழுத்தம் சீராகும்

வால்நட்ஸில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளன. இந்த பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள தேவையான முக்கிய ஊட்டச்சத்தாகும்.

ஆய்வுகளில் உயர் இரத்த அழுத்த நோயாளிகள் வால்நட்ஸை உட்கொண்டு வந்தால் அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வால்நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்வதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. 

📌நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும்

வால்நட்ஸை தினமும் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைக் குறைத்து பாதுகாப்பளிக்கும்.

அதோடு இதில் உள்ள வைட்டமின் ஈ நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது.

ஆகவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், வால்நட்ஸை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வாருங்கள்.

இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாக இருக்கும்.

அழற்சி/வீக்கம் குறையும்

வால்நட்ஸில் அழற்சி எதிர்ப்பு பண்புகளான பாலிஃபீனால்கள் மற்றம் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன.

எனவே வால்நட்ஸை தினமும் உட்கொள்ளும் போது அது உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து நாள்பட்ட நோய்களான இதய நோய், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவை வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும்.

குடல் ஆரோக்கியம் மேம்படும்

வால்நட்ஸில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.

எனவே வால்நட்ஸை தினசரி உணவில் சேர்க்கும் போது அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.

இதன் விளைவாக குடல் மற்றும் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

முக்கியமாக வால்நட்ஸை தினமும் உட்கொண்டு வந்தால் அது மலச்சிக்கல், வயிற்று உப்புசம் மற்றும் பிற அஜீரண கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.