ஆப்பிளுக்கு நிகராக கொய்யாப்பழமா?

பழங்கள் எமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகின்றன. பல வகையான பழங்கள் நம்மைச் சுற்றியுள்ளன.

அதில் நிறைய பேர் ஆப்பிளை பழங்களிலேயே மிகவும் ஆரோக்கியமானதாக நினைக்கிறார்கள்.

ஆனால் ஆப்பிளுக்கு இணையான சத்தை கொய்யாப்பழம் கொண்டுள்ளது. ஆப்பிளை விட கொய்யாப்பழம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடியது.

எனவே ஆப்பிளை வாங்கி சாப்பிட முடியாவிட்டால் கொய்யாப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் என கூறப்படுகின்றது.

சொல்லப்போனால் ஆப்பிளுடன் ஒப்பிடுகையில் கொய்யாப்பழத்தில் புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம்.

அதோடு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் அதிகளவு கொய்யாப்பழத்தில் உள்ளன.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் பல நோய்களின் அபாயங்களில் இருந்தும் விடுபடலாம். 

📌இதய ஆரோக்கியம்

கொய்யாப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இவை பல்வேறு இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன.

கூடுதலாக இது உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தை சமநிலையில் பராமரிக்க உதவி புரிந்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது. 

உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், அது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய வழிவகை செய்யும்.

எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். 

📌ஆரோக்கியமான செரிமான மண்டலம்

கொய்யாப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால் அது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிககல் போன்றவற்றை சரிசெய்கிறது.

கொய்யாப்பழத்தை மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள விதைகள் மலமிளக்கியாக செயல்பட்டு, குடலியக்கத்தை ஒழுங்காக நடைபெறச் செய்கிறது.

எனவே செரிமானம் சீராக நடைபெற மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். 

📌கண் பார்வை மேம்படும்

கொய்யாப்பழம் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளன.

உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் தான் அது கண்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

எனவே கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடாதெனில் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். 

📌ஆரோக்கியமான சருமம்

கொய்யாப்பழத்தில் கரோட்டின், லைகோபைன் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமாக உள்ளன.

இச்சத்துக்கள் அனைத்துமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவைகளாகும்.

முகப்பரு அதிகமாக வருமானால் கொய்யாப்பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

இதனால் முகப்பரு வருவது குறைவதோடு சருமத்தின் அழகும் ஆரோக்கியமும் மேம்படும். 

📌மன அழுத்தம் குறையும்.

மன அழுத்தத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.

இதனால் அதில் உள்ள மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நரம்புகள் மற்றும் தசைகளை ரிலாக்ஸ் அடைய உதவி புரிந்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். 

📌சர்க்கரை நோய்க்கு நல்லது.

தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் கொய்யாப்பழம் இரத்த சர்க்கரை அளவைக் சீராக்குவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருப்பதால் சர்க்கரை நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.

அதிலும் கொய்யாப்பழத்தின் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரைக் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இருப்பினும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கொய்யாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் கொய்யாப்பழத்தின் தோலில் உள்ள அதிகப்படியான ஃபுருக்டோஸ் தான் என அந்த ஆய்வின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதாக இருந்தால், அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.