முகப்பரு பிரச்சனை குறையவே இல்லையா? இதுகூட காரணமா இருக்கலாம்!

இளவயது ஆண்கள் பெண்கள் என்று இருவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை இந்த முகப்பரு. இந்த முகப்பரு வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.

முகப்பருவிற்கு ஹார்மோன் மாற்றங்கள், உணவு பழக்கம், இருக்கும் சூழ்நிலை, மனநிலைகள், பயன்படுத்தும் காஸ்மெட்டிக் என்று பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் பிரதானமான ஒன்றாக உணவு பழக்கம் உள்ளது.

அந்தவகையில் ஒரு சில உணவுகள் முகப்பரு வருவதைத் தூண்டுமாம். அப்படியான உணவுகளை தவிர்தாலே நீங்கள் முகப்பருக்களில் இருந்து விடுபடலாம்.

📌தவிர்க்க வேண்டிய உணவுகள்

GI குறியீட்டு உணவுகள்

உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் - GI குறியீட்டு உணவுகள் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்த முனையும். இது சருமத்தில் முகப்பருவை உருவாக்கும் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.

சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் மைதாவால் செய்யப்படும் ரொட்டி, பாஸ்தா, மக்ரோனி மற்றும் சீஸ் போன்றஅதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இது நிறைந்துள்ளன. அதனால் இந்த உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது.

📌பால் மற்றும் பால் பொருட்கள்

பால் மற்றும் பால் பொருட்கள் இன்சுலின் அளவை உயர்த்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியாக பால் அல்லது பால் பொருட்கள் சாப்பிடும்போது இது பருக்கள் உற்பத்தியைத் தூண்டும்.

பாலில் ஏற்கனவே உள்ள வளர்ச்சி ஹார்மோன்கள் உடலின் ஹார்மோன் சமநிலையை அதிகரித்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன.

📌பொரித்த அல்லது வறுத்த உணவு

பொரித்த அல்லது வறுத்த உணவுகளில் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் காணப்படும் இது சருமத்தில் வீக்கத்தைத் தூண்டுவதாக அறியப்படுகிறது.

மேலும் இது தோல் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாகும். வறுத்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட வேகவைத்த பொருட்களையும் கூடதவிர்ப்பது நல்லது.

📌சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையும் முகப்பரு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே முடிந்தவரை அதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். சர்க்கரை முகப்பருவின் இரண்டு முக்கிய காரணங்களைத் தூண்டும் .

பழங்களில் காணப்படும் இயற்கை சர்க்கரை பிரச்சனை இல்லை என்றாலும், இனிப்பு வகைகள் , குக்கீஸ், சாக்லேட் போன்றவற்றில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளது. அவற்றை முடிந்தவரை குறைத்துவிடுங்கள்.

📌மலச்சிக்கல் 

வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் ஏற்படும் போதெல்லாம், உங்கள் முகத்தில் முகப்பரு வெடிப்பதை கவனிக்கலாம்.

எனவே உங்கள் வயிறு ஏற்றுக்கொள்ளும் உணவை மட்டும் சாப்பிடுங்கள் ஒவ்வாமை இருக்கும் உணவுகளை முடிந்தவரை சாப்பிடாதீர்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.