பக்கவாதம், மூட்டு வலி, இடுப்பு வலியை போக்கும் அற்புத கீரை!

முடக்கத்தான் கீரையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இந்தக் கீரை கிராமப்புறங்களில் சாதாரண வேலிகளில் படர்ந்து காணப்படும்.

இந்தக் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்துள்ளது. வாரத்திற்கு 3 முறை இந்தக் கீரையை சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமைப்பெறும்.

மேலும், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகளிலிருந்து விடுபட்டுவிடலாம். ஆனால், இந்தக் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். ஆனால், இந்தக் கீரையைக் கொதிக்க வைக்கக்கூடாது. அப்படி கொதிக்க வைத்தால் அதில் உள்ள மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும்.

சரி இந்த கீரையில் தினமும் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகளை பெறலாம் என்று பார்ப்போம்.

1. இடுப்பு, பாதம், கை, கால் முட்டி வலி இருப்பவர்கள் இந்த கீரை சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பலன் பெறலாம்.

2. உடல் வலி ஏற்பட்டால் உடனே இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் வலி நீங்கும்.

3. முடக்கத்தான் கீரையை நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், மலச்சிக்கல், மூல நோய், பாத வாதம் குணமாகும்.

4. மாதவிடாய் பிரச்சினை இருப்பவர்கள் தினமும் உணவில் முடக்கத்தான் கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

5. இந்தக் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் சரியாகும்.

6. வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

7. இக்கீரையை பருப்பு சேர்த்து கூட்டுப்போல் கூட செய்து சாப்பிடலாம். அப்படி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை பெறலாம்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.