தினமும் ஒரு அத்திப்பழம் - கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள்

பார்க்க வித்தியாசமான தோற்றத்துடனும், நிறத்துடனும் காட்சியளிக்கும் ஒரு பழம் தான் அத்திப்பழம். எந்த வடிவத்தில் இவற்றை உட்கொண்டாலும் அவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

நற்பதமான அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவு மற்றும் நீர்ச்சத்து அதிகம். உலர்ந்த அத்திப்பழத்தில் கலோரிகள் அதிகம் மற்றும் நீர்ச்சத்து குறைவு.

மற்றபடி இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கனிச்சத்துக்கள் அனைத்துமே உள்ளன.

நற்பதமான அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவு மற்றும் நீர்ச்சத்து அதிகம். உலர்ந்த அத்திப்பழத்தில் கலோரிகள் அதிகம் மற்றும் நீர்ச்சத்து குறைவு.

மற்றபடி இரண்டிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் கனிச்சத்துக்கள் அனைத்துமே உள்ளன.

முக்கியமாக இந்த பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளன.

இத தவிர பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், காப்பர், வைட்டமின் ஏ போன்ற ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும் சத்துக்கள் உள்ளன.  

📌எடை இழப்புக்கு உதவும்

உலர்ந்த அத்திப்பழம் எடையை குறைக்க நினைப்போருக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.

ஏனெனில் இதில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன.

இதை 2-3 துண்டுகள் சாப்பிட்டால், நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்து பசியுணர்வைக் கட்டுப்படுத்தும்.

இதன் விளைவாக உண்ணும் உணவுகளின் அளவு குறைந்து, உடல் எடை குறையும். 

📌இரத்த அழுத்தம் கட்டுப்படும்

தற்போது இரத்த அழுத்த பிரச்சனையை நிறைய பேர் கொண்டுள்ளனர்.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால், அது நாளடைவில் மாரடைப்பை வரவழைத்துவிடும்.

எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள், அதைக் கட்டுப்பாட்டில் வைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த பொட்டாசியம் அத்திப்பழத்தில் உள்ளன. எனவே அத்திப்பழத்தை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் கட்டுப்படும். 

📌செரிமான ஆரோக்கியம் மேம்படும்

அத்திப்பழத்தில் ப்ரீபயோடிக்குகள் அதிகமாக உள்ளன.

ப்ரீபயோடிக்குகள் புரோபயோடிக்குகளின் செயல்பாட்டிற்கு ஆதரவளித்து, செரிமான செயல்முறையை மேம்படுத்தும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

அத்திப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற உதவிபுரியும். 

📌கருவளத்திற்கு நல்லது

பண்டைய காலத்திலிருந்தே அத்திப்பழங்கள், கருவுறுதலின் அடையாளமாக கருதப்பட்டது.

அத்திப்பழத்தில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது.

இரும்புச்சத்து பெண்களின் முழு அண்டவிடுப்பின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே இதை உட்கொள்ளும் போது கருவளம் மேம்படும்.

அதுவும் ஆண்கள் அத்திப்பழத்தை சாப்பிடும் போது அவர்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் மேம்பட்டு இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

📌இதய ஆரோக்கியம் மேம்படும்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இது உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்புக்களை நீக்க உதவி புரிவதோடு இதயத்தில் கொடுக்கப்படும் அழுத்தமும் குறையும்.

இதன் விளைவாக இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

ஆகவே இதய பிரச்சனை வரக்கூடாதெனில், அத்திப்பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.