அடிக்கடி கை நடுங்கினால் இதுதான் பிரச்சினை

நமக்கு கைகள் மிக மிக அவசியமான உறுப்பாகும். ஏனென்றால், ஒரு பொளை எடுத்து மற்ற இடத்தில் வைப்பதற்கும், அன்றாட வேலைகளை செய்வதற்கும் கை மிக முக்கியம்.

அந்த கைகளை நாம் வலிமையோடும், ஆரோக்கியத்தோடும் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிலருக்கு திடீரென்று கைகள் நடுங்க ஆரம்பிக்கும்.

அப்படி ஏன் கைகள் நடுங்குகின்ற என்பதை இந்தப் பகுதியில் விரிவாக பார்ப்போம் -

📌ஆல்கஹால்

சிலருக்கு 6 மணிக்கு மேல் ஆனால் கைகள் நடுங்கும். கேட்டால் சரக்கு அடிக்கவில்லை அதான் கை நடுங்குகிறது என்று சொல்வார்கள். ஆனால், இது உண்மைதான். சிலர் ஆல்கஹாலை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் வழக்கம் உள்ளவர்கள். இவர்களுடைய வாழ்க்கை முறையும், உணவுமுறையும் மாற்றிகொள்வார்கள். இதனால், இவர்கள் திடீரென்று மது சாப்பிடவில்லையென்றால், உடனே அவர்களுக்கு நடுங்கும் பிரச்சினை உண்டாகிவிடும்.​

📌பதட்டம்

திடீரென்று நமக்கு கைகள் நடுங்குவதற்கு காரணம் பதட்டம்தான். நமக்கு உடலில் பயம், மனச்சோர்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகள் அட்ரீனலின் உற்பத்தியை அதிகரிக்கும்போது நமக்கு பதட்டம் ஏற்படுகிறது.​

📌ரத்த சர்க்கரை

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் பிரச்சினை அதிகமாக வரும். அதேபோல் சர்க்கரை அளவை நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடலுக்கு தேவையான அளவை விட ரத்தத்தில் குறைந்த அளவு சர்க்கரை இருந்தால் சிலருக்கு கைகள் நடுங்க ஆரம்பித்துவிடும்.​

📌நரம்புக் கோளாறுகள்

நரம்பு மண்டலத்தில் பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு ரத்த ஓட்டப் பிரச்சினை ஏற்படும் போது கை நடுக்கம் கொடுக்கும்.​பார்கின்சன் நோய் வயதான சிலருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக அல்சைமர், பர்கின்சன் பிரச்சினைகள் ஏற்படும். அப்போது, எலும்பு மற்றும் நரம்பு வலிமை குறையும். அப்போது, கை நடுக்கம் அதிகரிக்கும். 

📌ஹைபர் தைராய்டிசம்

சிலருக்கு தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருக்கும். இவர்களுக்கு தைராய்டு ஹார்மோன்ஸ் அதிகமாக சுரந்தால் அதை ஹைபர் தைராய்டிசம் என்று கூறுவார்கள். இந்த ஹைபர் தைராய்டிசம் அதிகரிக்கும்போது கை பயங்கரமாக நடுங்கும்.​

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.