இந்த காய்கறிகளை சமைக்காமல் அப்படியே சாப்பிட வேண்டுமாம்.

உடலை ஆரோக்கியத்திற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியம் தேவை.

ஆனால் சிலவற்றை சமைத்தால் அவற்றின் ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்காது.

உடலை ஆரோக்கியத்திற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் அவசியம் தேவை.

ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது அதிக நன்மையை தரும். 

📌தக்காளி

தக்காளியின் சத்துக்களை முழுமையாக பெற விரும்புபவர்கள் அதை சாலட் வடிவில் சாப்பிடுவது சிறந்தது.

இதில் வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.

📌பீட்ரூட்

இரும்புச்சத்து நிறைந்த காய்கறியாகும். இதனை பச்சையாக சாப்பிடும் போது அதிக நன்மை பயக்கும்.

பச்சையாக பீட்ரூட் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

📌ப்ரோக்கோலி

இது ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாகும். இதனை பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடுவது எப்போதும் சிறந்தது. 

ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் பருமனையும் குறைக்க உதவுகிறது. 

📌காலிஃபிளவர்

இதனை வேக வைக்கத் தேவையில்லை. இதை பச்சையாக சாப்பிட்டால் முழுமையான சத்துக்கள் கிடைக்கும். 

மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.

📌வெங்காயம்

இதை பச்சையாக அப்படியே உட்கொள்ளவதால் அதிக சத்து கிடைக்கும்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.