''ஆகூழ் (அதிர்ஷ்டம் - LUCK ) என்றால்...!"

ஆகூழ்  என்பதற்கு உண்மையான பொருள் என்னவென்று  தெரியுமா...?

குருட்டுத்தனம் 

அதாவது திர்ஷ்டம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பார்வை என்பது பொருள். அதிர்ஷ்டம் என்றால் ‘’பார்வையின்மை, குருட்டுத்தனம்’’ என்று பொருள்..

அதிர்ஷ்டம் என்ற சொல்லின் பொருள் இப்படி இருக்கப் பலரும் அதனைப் பயன்படுத்தி மனிதர்களைச் சோம்பேறியாக்கி வருகிறார்கள்.

அறிவினாலும், அறிவியலாலும் ஏற்றுக் கொள்ள முடியாததே மூடநம்பிக்கை ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால்!, அதுவே அறிவிற்கு ஒவ்வாத செயல்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால் அது மூட நம்பிக்கையே...!

.‘’அதிர்ஷ்டம்’’ என்னும் பெயரில் மக்களிடையே பரவியுள்ள மூடநம்பிக்கைகள் பெருமளவு காரணம் காட்டியே உழைக்காமல் சோம்பேறிகளாக நிறையப் பேர் உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் மன்னராக மூன்றாம் ஜார்ஜ் இருந்த போது, மாறு வேடத்தில் சென்று நாட்டின் நிலைமையைக் கண்டு வருவார். ஒரு நாள் நாட்டு மக்கள் அனைவருக்கும் விருந்து கொடுக்க ஆசைப்பட்டார் மன்னர். 

விருந்தோடு மக்கள் பார்த்து இன்புற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தார். முறைப்படி மக்களுக்கு அறிவித்தார். மன்னர் கொடுக்கும் விருந்திற்கு ஊர் மக்கள் அனைவரும் சென்றனர். ஊரே எவருமின்றி அமைதியாக இருந்தது.

மக்களே இல்லாத ஊரினைக் காண, மன்னர் குதிரையில் மாறுவேடத்தில் வந்தார். அப்போது!, ஒரே ஒரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்பெண்ணைப் பார்த்த மன்னர், பெண்ணே!,  ஊரே மக்களின்றி அமைதியாக உள்ளது, எல்லோரும் எங்கே சென்றுள்ளார்கள்'' எனக் கேட்டார்.

வேலையில் தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்த அப்பெண், தன் பார்வையினைத் திருப்பாமலேயே, மன்னர் திடீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

மேலும், அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்குப் பரிசுப் பொருளினையும் வழங்க உள்ளாராம். எல்லோரும் அதிர்ஷ்டத்தை நம்பிச் சென்றுள்ளனர் என்று கூறினார்.

இதனைக் கேட்ட மன்னர், நீ போகவில்லையா...? உனக்கும் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளதே!, என்றார். வேலையைச் செய்து கொண்டே அப்பெண், அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேனே இந்த வேலைக்கான கூலி நிச்சயம் எனக்குக் கிடைக்கும்.

விருந்திற்குப் போனால் இன்றைய நாளினை என் வாழ்நாளில் இழந்ததாகக் கருதுகிறேன். இன்று வேலை செய்த கூலியையும் இழந்து விடுவேன். என் குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்தும் நான் தவறி விடுவதாகக் கருதுகிறேன்..

எனவே!, நான் விருந்துக்குச் செல்லவில்லை என்றாள் அந்தப் பெண். இதனைக் கேட்ட மன்னர் வியப்புற்று, பெண்ணே! அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து மன்னரைத் தேடிச் சென்றவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை.

உன் உழைப்பு தான் அதிர்ஷ்டத்தை உனக்குக் கொடுத்து உள்ளது என்று பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்…

ஆம் நண்பர்களே...!

🟡 தயவுசெய்து உங்களது திறமையையும் உழைப்பையும் நம்புங்கள். அதைவிட அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். அந்த மூடநம்பிக்கை உங்களை எதிர்மறை குணமுள்ளவராக மாற்றி விடும். நல்ல வாய்ப்புகளை நழுவ விடாமல் முழுமனதோடு உழைப்பவர்களுக்கே வெற்றி வந்து சேரும்...!

🔴 வெற்றிக்கு அடிப்படை கடின உழைப்பு. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி உறுதி...!!

⚫ போலிச் சாமியார், அதிர்ஷ்டக் கல், வாஸ்து, புதிதாய் வாஸ்து மீன் என்றெல்லாம் ஏமாறாமல் அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். எந்த ஒரு முயற்சியிலும் அதிக கவனம் செலுத்தி, நல்ல சிந்தனைகளுடன் கூடிய உழைப்பைத் தந்தால், அது நல்லபடியாக நடக்கும்...!!!

- உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.