வரலாற்றில் இன்று – 01.09.2023

செப்டம்பர் 1 (September 1) கிரிகோரியன் ஆண்டின் 244 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 245 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 121 நாட்கள் உள்ளன.

📌 இன்றைய தின நிகழ்வுகள்

1715 – பிரான்சின் அரசன் பதினான்காம் லூயி 72 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தான். இவனே நீண்ட காலம் ஆட்சி புரிந்த ஐரோப்பிய அரசன்.

1752 – விடுதலை மணி பிலடெல்பியாவை வந்தடைந்தது.

1798 – இலங்கையில் முதலியார் வகுப்பை பிரித்தானிய இலங்கையர் மீண்டும் உருவாக்கினர்.

1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் பின்வாங்கிச் சென்ற அமெரிக்கப் படைகளை வேர்ஜீனியாவின் சாண்டிலி என்ற இடத்தில் தாக்கினர்.

1894 – அமெரிக்காவில் மினசோட்டாவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 400 பேர் கொல்லப்பட்டனர்.

1897 – வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.

1902 – முதலாவது அறிவியல் புனை திரைப்படம் (A Trip to the Moon) பிரான்சில் திரையிடப்பட்டது.

1914 – ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது.

1914 – கடைசி பயணிக்கும் புறா சின்சினாட்டி மிருகக்காட்சிச் சாலையில் இறந்தது.

1923 – டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சுமார் 105,000 பேர் கொல்லப்பட்டனர்.

1928 – அகமெட் சோகு அல்பேனியா நாட்டை முடியாட்சியாக அறிவித்துத் தன்னை அதன் மன்னராக அறிவித்தார்.

1939 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி போலந்தைத் தாக்கி போரை ஆரம்பித்து வைத்தது.

1951 – ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியன தமக்கிடையே பாதுகாப்பு ஒப்பந்தத்தை (ஆன்சஸ் ஒப்பந்தம்) செய்து கொண்டன.

1961 – எரித்திரிய விடுதலைப் போர் ஆரம்பமானது. ஹமீட் இட்ரிஸ் அவாட்டெ என்பவர் எதியோப்பியக் காவல்துறை மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

1969 – அல் கடாஃபி புரட்சியின் மூலம் லிபியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1970 – ஜோர்தான் மன்னர் உசேன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினார்.

1972 – ஐஸ்லாந்தில் இடம்பெற்ற உலக்க்க் சதுரங்கப் போட்டியில் அமெரிக்கரான பொபி ஃபிஷர் ரஷ்யரான பொரிஸ் ஸ்பாஸ்கியை வென்று உலகக் கிண்னத்தை வென்றார்.

1979 – நாசாவின் பயனியர் 11 ஆளில்லா விண்கலம் சனி கோளை 21,000 கிமீ தூரத்தில் அடைந்தது. இதுவே முதன் முதலில் சனியை அடைந்த விண்கலம் ஆகும்.

1981 – மத்திய ஆபிரிக்கக் குடியரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் டேவிட் டாக்கோ பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1983 – பனிப்போர்: சோவியத் ஒன்றியத்தினுள் அத்துமீறி நுழைந்த கொரிய பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணஞ் செய்த 269 பேரும் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் அமெரிக்க அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் லோரன்ஸ் மாக்டொனால்ட்டும் ஒருவர்.

1984 – யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

1985 – அமெரிக்க, பிரெஞ்சு கூட்டு முயற்சியில் டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1991 – உஸ்பெகிஸ்தான், சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேறி விடுதலையை அறிவித்தது.

2004 – ரஷ்யாவில் பெஸ்லான் நகரப் பாடசாலை ஒன்றில் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்களைப் பணயக் கைதிகளாக்கிய நிகழ்வு ஆரம்பமாயிற்று.

2007 – மன்னாரில் பாசித்தென்றலில் இலங்கை இராணுவத்தினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

📌 இன்றைய தின பிறப்புகள்

1877 – அ. வரதநஞ்சைய பிள்ளை, தமிழறிஞர் (இ. 1956)

1895 – செம்பை வைத்தியநாத பாகவதர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1974)

1925 – ராய் கிளாபர், அமெரிக்க இயற்பியலாளர்

1970 – பத்மா லட்சுமி, அமெரிக்க நடிகை

1980 – கரீனா கபூர், இந்திய நடிகை

📌 இன்றைய தின இறப்புகள்

1557 – ஜாக் கார்ட்டியே, பிரான்சிய புதுப்புலம் ஏகுநர் (பி. 1491)

1961 – ஈரோ சாரினென், கட்டிடக்கலைஞர் (பி. 1910

1980 – தனிநாயகம் அடிகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தாபகர் (பி 1913)

2014 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (பி. 1922)

📌 இன்றைய தின சிறப்பு நாள்

லிபியா – புரட்சி நாள் (1969)

சிங்கப்பூர் – ஆசிரியர் நாள்

சிலவாக்கியா – அரசமைப்பு நாள்

உஸ்பெகிஸ்தான் – விடுதலை நாள் (1991)

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.