சொ(நொ)ந்த கதை.

சில பேர் இருக்கிறார்கள், காலையில் இருந்து இரவு வரை ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

   எப்போதும் எல்லோரையும் விமர்சனம் செய்யும்  நபர்கள் இவர்களை காசுக் காக ஓடிக் கிட்டே  இருக்கான்  என்று ஏளனம் செய்வார்கள்.

 பணம் மட்டுமே குறிக்கோள் என்று ஓடிக் கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு உறவுகளுடன் நெருக்கம் பேண இயலாது.

அதே சமயம் வேறு சிலர் இருக்கிறார்கள். அத்தனை விழாக்களிலும் தவறாது கலந்து கொள்வார்கள்.

குடும்பத்திலும் உறவை நன்கு பராமரிப்பார்கள். தொழிலும் மும்முரமாக செயல் பட்டுக் கொண்டு இருப்பார்கள்.

 தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கும் இந்த மனிதர்க ளை கண்டு நான் வியந்து போய் இருக்கிறேன்.

அவர்கள் செயலுக்கு அடிமை ஆகி விட்டார்களா?.இல்லை அதில் சிக்கி போய் விட்டார்களா  என்று தெரியவில்லை.

  நாற்பது வருடங்களுக்கு முன்பு நான்  ஹோட்டலுக்கு வந்த புதிதில், என்னை   sweet stall ஐ கவனித்துக் கொள்ள சொன்னார்கள்.

நான் மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வமுடனும்  காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணிக்கு கடை மூடும் வரை தொடர்ந்து உற்சாகத்தோடு வேலை செய்தேன்.

  அப்போது இடையிடையே நீ கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக் கொள் என்று சொல்வார்கள். நான் எனக்கு ஓய்வு எதற்கு. தேவையில்லை என்று சொல்வேன்,

   அவர்கள் ஆச்சர்யத்துடன் என்னை பார்ப்பார்கள். பின்னர் என்னை மார்க்கெட் போய் சில்லறை வாங்கி வா.அது வாங்கிட்டு வா .இது வாங்கிட்டு வா என்று வேலை வாங்குவார்கள். நானும் ஆர்வமுடன் அவற்றை செய்வேன்.

  பின்பு என் மீது அக்கறை உள்ள நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள். நீ ஓய்வு இன்றி வேலை பார்த்தால் உன் உடல் நிலை கெட்டு விடும்.

   உனது ஓய்வு நேரத்தை  பிறர் அவர்களது தேவைக்காக உன்னை பயன் படுத்தி உன்னை ஏமாற்றுகிறார்கள்.

 உனக்கு இது புரியவில்லை   அப்பாவியாக இருக்காதே .ஏமாறாதே என்று அட்வைஸ் செய் தார்கள்.

   எனக்கு அது கொஞ்சம் புரிந்தது. ஆனாலும் என்னை பிறர் அவர்கள் தேவை க்கு பயன் படுத்திக் கொள்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

  பின்னர் வாழ்கை அநேக அனுபவங்கள் மூலம் எனக்கு நன்கு புரிய வைத்தது. அதற்குள் எத்தனையோ துரோகங்கள்.ஏமாற்றங்கள்.

  இருபது வருடம் முன்பு காலை ஐந்து மணி  முதல் இரவு 12 மணி வரை ஓயாமல் ஓடிக் கொண்டே இருந்தேன்.

  நெருங்கியவர்கள் கூட ஒரு ஐந்து நிமிடம் உன்னோடு பேச முடியுமா என்று கேட்டு விட்டு தான் பேசவே செய்வார்கள்.

  அந்த பரபரப்பு எனக்கும் பிடித்து தான் இருந்தது. அதாவது செயல்களில் நான் சிக்கிக் கொண்டேன்.அது ஒரு விதமான போதை.

  அப்போது நான் எங்களது ரோட்டரி கிளப் பில் ட்ரெசரராக இருந்தேன். அதில் நடக்கும் சில ஊழல்கள் எனக்கு மிகவும் சோர்வை அளித்தது.

  என்னால் அதற்கு உடந்தையாக இருக்க முடியவில்லை. மிகவும் மன வருத்தத் தோடு வீட்டில் இருந்து யோசிக்கையில் திடீரென மனதில் ஒரு எண்ணம்  தோன்றியது.

   என்ன மாதிரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் நான். இடைவிடாத

ஓட்டம் முதுகு வலி மற்றும் மூட்டு வலியை வேறு கொண்டு வந்து விட்டது. மேலும் வீட்டில் இருக்கும் நேரமும் மிக குறைவு.

  இருக்கும் போதும் அழுத்தி  வைத்த அத்தனை உணர்வுகளுக்கும் வடிகாலாய் மனைவி, மக்கள் மீது எரிந்து விழுந்து வீட்டை நரகமாக்கி கொண்டு வருகிறேன்.

  கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதையாக அல்லவா இருக்கிறது நம் வாழ்வு என்று ஒரே குழப்பம்.

  குடும்பத்தையும் இழந்து ஆரோக்கியத்தையும் இழந்து என்ன மாதிரி வாழ்வு இது. எதற்காக இப்படி ஓடுகிறேன்?.இது தேவையா! என்ற மிகப் பெரிய  கேள்வி.

 அந்த நிமிடம் முடிவெடுத்தேன்  ஆரோக்கியமும், குடும்பமும் தான் முக்கியம் வேறு எதுவும் தேவை யில்லை என்று.

  உள்ளத்தில் உள்ளதை மறைக்கத் தெரியாது எனக்கு. ரோட்டரியில் பொங்கி விட்டேன். அவர்கள் அரண்டு விட்டார்கள்.

  எத்தனையோ சமாதானம் செய்தார்கள் .நான் நீங்க என்ன வேணா பண்ணிக் கோங்க . என்னால் உங்களுக்கு எந்த வித இடையூறும் வராது என்று ஒதுங்கிக் கொண்டேன்.

   அப்போது தான் ஓன்று புரிந்தது. *நாம் யாரையும் ஏமாற்றாமல் இருந்தால் மட் டும் போதாது,நாமும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பது.

   ஈரோட்டில் நண்பர்கள் சொன்னபோது புரியாதது அநேக ஏமாற்றங்கள் மூலம் இருபது வருடங்கள் கழித்து புரிந்தது.

 வாழ்கை மீதே விரக்தி. அனைவர் மீதும் வெறுப்பு என்று எனது வாழ்வின் மிகவும் கடினமான நாட்கள்.

  இறைவன் அருளால் அத்தனையையும் கடந்து வந்து விட்டேன். இன்று என் மனதில் யார் மீதும் வெறுப்பு இல்லை.

  குடும்பம், உறவுகள், ஆரோக்கியம் என்று அனைத்தையும் கவனமாக கையாள இயல்கிறது.

 எந்த ஓட்டமும் இல்லை. பரபரப்பும் இல்லை. அதற்காக வாழ்கை சிக்கல்கள் ஏதும் இல்லை என்பதில்லை.

அது வழக்கம் போல் மதில் மீது பூனையாய் எந்த நேரமும் மேலே விழுந்து பிரா ண்ட தயாராகத் தான் இருக்கிறது.

ஆனால் அதை எப்படி கையாள வேண்டும் என்பது புரிந்து விட்டது.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.