வயிற்றுப் புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை

ஊட்டச்சத்து மிகுந்த கீரை வகைகளில் ஒன்று மணத்தக்காளி கீரை, இது அற்புதமான மருத்துவ பயன்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்டது.

மணத்தக்காளி கீரையை குழம்பு, சூப், கூட்டு செய்து சாப்பிடலாம்.

இக்கீரையில் விட்டமின் ஈ மற்றும் விட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் குணமாகும், மேலும் இதிலுள்ள விட்டமின்கள்  கண் பார்வை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

📌மணத்தக்காளி கீரை  

இதன் பழத்தை சாப்பிடுவதால் காசநோய் பிரச்சனைகள் குணமாகும். குழந்தைகள் நன்றாக ஊட்டம் பெற மணத்தக்காளியில் ரசம் வைத்து கொடுக்கலாம்.

இதன் இலைகளை மென்று சாப்பிட்டு வர வாய்ப்புண் பிரச்சினை குணமாகும். மேலும் இருதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும். களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.

மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும். மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும்.

📌மணத்தக்காளி 

சிறுநீர், வியர்வையைப் பெருக்கி என உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.

உடற்சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் உடற்சூடு குறையும்.

கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

📌மணத்தக்காளியின் ஊட்டச்சத்து மதிப்பு

100 கிராம் மணத்தக்காளியில்,

சுமார் 68 கலோரிகள்,

8.9 கிராம் கார்போஹைட்ரெட்,

2.1 கிராம் தாதுக்கள் ,

1.0 கிராம் கொழுப்பு,

5.9 கிராம் புரதம்,

410 மி.கி கால்சியம்,

70 மி.கி பாஸ்பரஸ் மற்றும்

20.5 மி.கி இரும்புச்சத்து உள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.