நரை முடி மறைய சுலபமான வழிகள்.

நெல்லிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி, வெயிலில் காயவைத்து பின் அதனை எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை சூடேற்றி, பின் ஆரியதும் அதை தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து வந்தால்,வெள்ளை முடி மறையும்.

தேங்காய் எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனை தலை முடியில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் நரைமுடி மறைய ஆரம்பிக்கும்.

ஹென்னா என்னும் மருதாணி பொடியைக் 2 ஸ்பூன் எடுத்து கொண்டு தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் கலக்கி முடியில் தேய்த்து ஊறவைத்து 5 நிமிடம் கழித்து அலச வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை முடியைப் பராமரித்தால், முடி அதன் இயற்கை நிறத்தைப் பெறுவதோடு பட்டுப் போன்று மென்மையாகவும் இருக்கும்.

கறிவேப்பிலையை மோர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல் செய்து, அதனை தலையில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இப்படி வாரம் 2 முறை செய்து வந்தால், நரை முடி விரைவில் மறைந்திடும்.

வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்கு தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் குளிக்கலாம். இரவில் படுக்கும் போது வெந்தயத்தை தண்ணிரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், நரை முடி மறையும்.

1 கப் ப்ளாக் டீயில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து அலசவேண்டும். இப்படி வாரம் 2-3 முறை செய்து வந்தால், வெள்ளை முடியை விரைவில் போக்கலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.