நட்பு வலை தேடும் மீன்கள்.

வாழ்வில் உயர்ந்தவர்கள் ஆக வேண்டும் என்று விரும்பிய மேக்ஸ் கந்தர் என்பவர் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களை பலரையும் ஓர் ஆராய்ச்சி செய்தார்.

எந்த அடிப்படை குணம் அவர்களை உயர்ந்தவர் ஆக்கியது என்று அறிந்த போது அவருக்கு ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது.

அதாவது வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் பலரும் நண்பர்கள் வட்டாரத்தைப் பெருக்குவதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள் என்று.

அதில் உபயோகமானவர்கள், உபயோகமற்றவர்கள்

என்ற எந்தப் 

பாகுபாடுகள் எதுவுமின்றி எல்லோர்களின் அறிமுகங்களையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

காரணம் வலை பெரிதாக உள்ள போது மீன்கள் நிறைய சிக்குவது போல இவர்களது நட்பு வட்டம் பெரிதாக உள்ளது.

அதனால் இவர்களின் தொழில்கள் சிறக்கின்றன..

வாழ்வில் உயர்வும் அடைகிறார்கள்..

ஒரு மனிதரை நாம் முதல்முதலாக சந்திக்கும் போது அவரது 

வெளித்தோற்றத்தைக் கண்டு அவரைத் தவறாக கணித்து விடக் கூடாது.

இந்த எண்ணம் மிகவும் ஆபத்தானது.

அதற்குப் பதிலாக மனம் விட்டுப் பேசி அவர்களோடு ஒன்றிப் பழகும் போது தான் அவரின் நிறைகுறைகளை நம்மால் நன்கு அறிந்துக் கொள்ள முடியும்.

ஆம்.,நண்பர்களே..,

ஒருவரின் வெற்றிக்கு உழைப்பு எந்தளவுக்கு அவசியமோ,அதே அளவு நல்லவர்களின் நட்பும் அவசியம்.

நமது பெற்றோர்களையும்,

சகோதரிகளையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. 

ஆனால் நண்பனாக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

ஒருவரின் வாழ்க்கையை திசை மாற்றும் வல்லமை கொண்டது நட்பு., அப்படிப்பட்ட நட்பு பெற நண்பர்களைத் தேர்ந்து எடுப்பதில் மிகவும் கவனம் தேவை.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.