மற்றவர்களுடன் உரையாடும் போது.

சிலர் மற்றவர்களுடன் உரையாடும் போது, பேசும் போது மற்றவர்களுக்குப் புரிகின்றதா? புரியவில்லையா? என்பதை எல்லாம் கவலைப்படாமல் படபடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க.

இத்தகையப் பேச்சு கேட்பவருக்கு எரிச்சலைத் தான் தரும். அதனால் அவர் கேட்பதைப் பாதியிலேயே நிறுத்தி விடுவார்கள். அதனால, மற்றவர்களுக்குப் புரியும்படி தெளிவாகப் பேசணும்.

அப்போது தான் நமது பேச்சை மற்றவர்கள் விரும்பிக் கேட்பார்கள்.. முடிந்தவரைக் குரலைத் தாழ்த்தி,இனிமையாகப் பேசப் பழக வேண்டும். அப்படிப் பேசுவது தான் நம்மைப் பண்பு உள்ளவராகக் காட்டும்.

எப்படிப்பட்ட சூழ்நிலையிலும், எந்த நிலையிலிருந்து மாறக் கூடாது..

உணர்ச்சி வசப்பட்டு ஆவேசத்துடன் கூச்சலிட்டுப் பேசினால், அது கேட்க சங்கடமாக இருப்பதுடன், நம்மைப் பற்றிய நல்ல எண்ணம் மாறுவதற்கு நாமே காரணமாக ஆகி விடுவோம்.

சிலர் பேசும் போது மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், தாங்கள் மட்டுமே பேசிக்கொண்டிருப்பர். 

இதனால், கேட்பவர் எரிச்சல் அடைவது மட்டுமின்றி, கேட்பதை நிறுத்தி விடுவர். எனவே, நம்மிடம் உள்ள இதுபோன்ற குறைகளை நீக்கி விட்டு மற்றவர்களுடன் உரையாட வேண்டும். 

அப்போது தான், நாம் அறிவாளியாகவே இருந்தால் கூட மற்றவர்கள் மத்தியில் நம் பேச்சு எடுபடும்.

ஆம்.,தோழர்களே..

உங்கள் உள்ளத்தில் உள்ள உணர்ச்சிகளையும், நீங்கள் சொல்லும் செய்தியும் பொருத்தமான உணர்ச்சிகளை வெளிக்காட்டும் விதத்தில் பேசுங்கள்.

அது கேட்போரின் இதயத்தை எட்ட வேண்டும்...

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.