தைராய்டு பிரச்சனைக்கு வீட்டு வைத்தியம்

இன்று பலருக்கும் இருக்க கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த தைராய்டு பிரச்சனையாகும். 

உடல் எப்போதும் அசதியாக இருப்பது, மாதவிலக்கு சரியாக ஏற்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

இன்றைய பெண்களிடம் அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளில், தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும் பிரச்சினை முக்கியமானது. 

பிறக்கும் குழந்தை முதல் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பெண்களில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக இன்றைக்கு இது உருவெடுத்துள்ளது. 

இதை ஆரம்ப நிலையிலேயே கவனித்துச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், பின்னால் ஏற்படுகிற அறிவாற்றல் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.

🇨🇭தைராக்சின் ஹார்மோன்

செய்கிற அற்புதப் பணிகள்.❗

👉 குழந்தையின் கரு வளர்வதில் தொடங்கி……… 

முழுமையான உடல் வளர்ச்சி, 

மூளை வளர்ச்சி, 

எலும்பின் உறுதி, 

தசையின் உறுதி, 

புத்திக்கூர்மை 

எனப் பலவற்றுக்குத் தைராக்சின் ஹார்மோன்தான் ஆதாரம். 

உடல் செல்கள் பிராணவாயுவைப் பயன்படுத்தி வேதிவினைகள் புரிவதற்குத் தைராக்சின் தேவை.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு முதலிய உணவுச் சத்துகளின் வளர்சிதைமாற்றப் பணிகளை ஊக்குவிப்பதும், 

புரதச் சத்தைப் பயன்படுத்தி உடல் வளர்ச்சியைத் தூண்டுவதும், 

சிறுகுடலில் உள்ள உணவுக் கூழிலிருந்து குளுக்கோஸைப் பிரித்து ரத்தத்தில் கலப்பதும், 

ரத்தக் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதும் 

தைராக்சின் ஹார்மோன் செய்கிற அற்புதப் பணிகள்.

அதுமட்டுமின்றி…

இதயம், 

குடல், 

நரம்பு, 

தசை, 

பாலின உறுப்புகள் 

போன்ற முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகளையும் தைராக்சின் ஹார்மோன்தான் ஊக்குவிக்கிறது. 

மனித உடலில்

வெப்பத்தை உண்டாக்கி, அதைச் சமநிலையில் வைத்திருப்பது, 

உடல் செல்களில் பல என்சைம்களைத் தயாரித்துக் கொடுப்பது, 

பருவமடைவதற்கும் , கருத்தரித்தலுக்கும் துணைபுரிவது 

ஆகியவற்றில் தைராக்சின் முக்கியப் பங்கு வகிக்கிறது.

 💢 #ஹைப்பர்_தைராய்டு 👆 [ அதிகம் ]

ஹைப்பர் தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியில் அளவுக்கு அதிகமாக தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கும் நிலையாகும்.

❓அறிகுறிகள்❓

அதிகமாக வியர்ப்பது

 தும்மல்

எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது

நினைவாற்றல் பிரச்சனை

மோசமான குடலியக்கம்

படபடப்பு

மன அழுத்தம்

எடை குறைவு

மாதவிடாய் பிரச்சனைகள்

அதிகப்படியான சோர்வு

💢ஹைப்போ_தைராய்டு👇 [குறைய ]

ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் மோசமான செயல்பாட்டால், போதிய அளவு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படாத நிலையாகும்.

இதன் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருக்கும். செயல்கள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாது.

❓அறிகுறிகள்❓

நகங்களில் வெடிப்பு

மலச்சிக்கல்

உடல் பருமன்

தசைப் பிடிப்புகள்

மோசமான மாதவிடாய் கால இரத்தப் போக்கு

கழுத்தின் முன் பகுதியில் வீக்கம்

மிகுதியான களைப்பு

நினைவாற்றல் பிரச்சனை

வறட்சியான சருமம் மற்றும் தலைமுடி

மன இறுக்கம்

🔴 அடுத்தடுத்துத் தலைதூக்கும் பிரச்சினைகள்……❗❓

முகம் வீங்கும். 

முடி கொட்டும். 

இளநரை தோன்றும். 

தோல் வறட்சி ஆகும். 

பசி குறையும். ஆனால், 

உடல் எடை அதிகரிக்கும். 

அடிக்கடி மலச்சிக்கல் உண்டாகும்.

ஞாபக மறதி, 

அதிகத் தூக்கம், 

முறையற்ற மாதவிலக்கு, 

குரலில் மாற்றம், 

கை, கால்களில் மதமதப்பு, 

கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்சினை, 

மூட்டுவலி 

ரத்தசோகை, 

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பது

போன்ற பாதிப்புகள் குறை தைராய்டு உள்ளவர்களிடம் காணப்படும் முக்கியமான அறிகுறிகள்.

🔴 தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை எல்லாம் சாப்பிட கூடாது.

குறை தைராய்டு பாதிப்புக்குத் தைராக்சின் மருந்தைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இந்த மருந்தின் அளவு, அதற்கான கால அளவு ஆகியவற்றை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும். 

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த மருந்தை நிறுத்தக்கூடாது. 

அயோடின் குறைவால் வரும் முன்கழுத்துக் கழலை நோய்க்குப் போதுமான அளவு அயோடின் கலந்த சமையல் உப்பைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் பிரச்சினையைக் கட்டுப்படுத்த முடியும்.

நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். கடல் சார்ந்த உணவு வகைகளில் அயோடின் சத்து அதிகம் என்பதால் மீன், நண்டு போன்ற உணவு வகைகள் நல்லது. பால், முட்டை, இறைச்சி சாப்பிட வேண்டியது முக்கியம்.

பசலைக்கீரை, முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், டர்னிப் ஆகியவற்றைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். சமையலுக்குச் சாதாரண உப்பைப் பயன்படுத்துவதைவிட அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்த வேண்டும்.

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் குளுட்டன் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளுட்டனானது, கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் இருக்கும். எனவே இந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுக்க வேண்டாம்.

பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் அதிகம் இருப்பதால், இவற்றை தைராய்டு உள்ளவர்கள் சிறிது உட்கொண்டாலும், அது தைராக்ஸின் ஹார்மோனின் உற்பத்திக்கு இடையூறு விளைவிக்கும். எனவே பாஸ்ட் ஃபுட் உணவுகள் மட்டுமின்றி, எண்ணெயில் பொரித்த உணவுகளையும் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

🇨🇭வீட்டு கை வைத்தியம்…❓❓❓

💊குப்பைமேனி சூரணம்💊

❓தேவையானவை❓

குப்பைமேனி இலை அரை கிலோ,  

ஆடாதொடை இலை அரை கிலோ, 

கல்உப்பு ஒருகிலோ 

இரும்பு சட்டியில் போட்டு வருக்கும் போது வெடிக்கும், இவ்விரண்டு இலைகளையும் நருக்கி சூடேரிய உப்பில் சிறிதாக போட்டு வருக்க வேண்டும், முழுவதும் தீர உப்பை ஆற விட்டு அரைத்து மீண்டும் அதே இலைகள், இவ்வாறு ஏழு முறை வருக்க வீரியமான மருந்து ரெடி.

தினம் உணவில் சேர்க்க தீர்வு உண்டு, மேலும் காலை எழுந்தவுடன் துண்டின் நுனியை திரிபோல் திரித்து மூக்கில் விட்டு பத்துமுறை தும்மவேண்டும், மதியம் ஒரு மணி நேரம் வெயில் காய வேண்டும்.

💊திரிபால கற்ப சூரணம்💊

✅ தேவையானவை❓

1. மந்தாரப் பட்டை 100 கிராம்

2. வேங்கைப் பட்டை 100

3. மாவிலிங்கம் வேர் 50

4. கடுக்காய்த் தோல் 50

5. தான்றிக்காய்த் தோல் 50

6. நெல்லி வற்றல் 50

7. சுக்கு 50

8. மிளகு 50

9. திப்பிலி 50

மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் சுத்தம் செய்து, தனித்தனியாக உலர்த்தி, தனித்தனியாக இடித்து வஸ்திரகாயம் செய்து பின்னர் சம அளவாய் ஒன்று சேர்த்து நன்றாகக் கலந்து, ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு, தேனில் கலந்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டால் தைராய்டு கோளாறு நிவர்த்தியாகும்.

🇨🇭 தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் ஜூஸை எப்படி செய்வதென்று பார்ப்போம். 

✅ தேவையான பொருட்கள்❓

சர்க்கரையில்லா கிரான்பெர்ரி இல்லாவிட்டால் கருப்பு திராட்சை சிரப் - 1 கப் 

தண்ணீர் - 8 டம்ளர் 

இஞ்சி பொடி - 1/4 டீஸ்பூன் 

பட்டை தூள் - 1/2 டீஸ்பூன் 

ஆரஞ்சு ஜூஸ் - 3/4 கப் 

எலுமிச்சை ஜுஸ் - 1/4 கப் 

★செய்முறை❓

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, அந்த ஜூஸை தினமும் விரும்பும் நேரத்தில் குடித்து வரலாம்.

இந்த ஜூஸை குடிப்பதால், ஆரம்பத்தில் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஆற்றல் அளவில் மாற்றங்களைக் காணலாம். அத்துடன் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் சிறு முன்னேற்றம் தெரிந்து, தைராய்டு ஹார்மோன்கள் சீரான அளவில் சுரப்பதைக் காண முடியும்.

💊பசலைக் கீரைச் சாறு (100 மிலி)💊 மற்றும் 

இஞ்சிச் சாறு (100 மிலி) 

ஆகியவற்றில் 100 கிராம் கொள்ளை ஊற வைத்து பிறகு காய வைத்துப் பொடியாக்கிக்

கொள்ளவும். இதில் தினமும் 2 ஸ்பூன் எடுத்து சிறிய வெங்காயம் சேர்த்து கஞ்சி காய்ச்சிக் குடித்தால் தைராய்டு நோய்கள் குணமாகும்.

💊தைராய்டு பிரச்னைக்கு💊 தூதுவளை சூப்

✅ தேவையானவை❓

நறுக்கிய தூதுவளை கீரை - ஒரு கப், 

பெரிய வெங்காயம் – 1, 

பூண்டு பல் – 5, 

மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், 

பச்சைமிளகாய் - 2, 

தக்காளி – 3, 

தேங்காய்ப் பால் - அரை கப், 

உப்பு – தேவையான அளவு, 

கொத்தமல்லி – சிறிதளவு.

👉செய்முறை❓

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியை மிக்ஸியில் போட்டு, நன்றாக அரைக்க வேண்டும். இந்த விழுதில் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில், தூதுவளை சேர்த்து, நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப் பால் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்க வேண்டும்.

 உடலுக்கு வலிமை தரும். ஆஸ்துமா, சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து. மூளை நரம்புகளை வலுப்படுத்தும். தைராய்டு கட்டிகள் இருப்பவர்கள், இந்த சூப் அருந்துவது நல்ல பலனைத் தரும். நுரையீரலை வலுப்படுத்தும்.

💊தைராய்டு நோய் கட்டுப்படுத்தும்💊 பனை நுங்கு பாயசம்

✅ தேவையான பொருட்கள்❓

தோல் நீக்கிய நுங்கு – ¼ கிலோ

வறுத்த சேமியா – 50 கிராம்

முந்திருப்பருப்பு – 50 கிராம்

திரட்சை – 50 கிராம்

ஏலக்காய் – 10 கிராம்

சர்க்கரை – 100 கிராம்

✅செய்முறை❓

முதலில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றை நெய்யில் வறுத்துச் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். சிறிதளவு சுடவைத்து ஆற வைத்த பாலையும் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் சேமியா சேர்த்து சர்க்கரை நுங்கு சேர்த்து நன்கு கிளறி பாயசம் போல் செய்யவும் தேவைக்கு நீர் அல்லது பால் சேர்த்து கொள்ளவும்.

இந்த பாயசத்தை தினசரி சாப்பிட்டு பாருங்கள், தைராய்டு நோய் கட்டுப்படுத்தும். இரத்த சோகை தீரும். உடல் பலம் பெறும். ஆண்மை பொங்கி பெருகும்.

💊தைராய்டு பாதிப்பால் குரலில்💊 மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற சூழல்களில் 

அதிமதுரம், 

அக்ரகாரம்  

கரிசலாங்கண்ணி 

போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து தினமும் இரண்டு கிராம் வீதம் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் குரல் இனிமையாகும்.

💊தைராய்டு பாதிப்பால்💊 ஒல்லியானவர்கள் தினமும்.

அக்ரூட் 20கிராம்

பருப்புடன்  

வேர்க்கடலை 40 கிராம் 

சேர்த்து அரைத்துக் குடித்து வந்தால் இளைத்த உடல் பருக்கும்.

💊துளசி, 💊

கண்டங்கத்திரி, தூதுவேளை, 

ஆடாதொடை இலை.

அனைத்தும் சேர்ந்து ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன்…

அதிமதுரம்,கருஞ்சீரகம்,சடாமஞ்சில், 

வில்வவேர்.

தலா ஐந்து கிராம், சின்ன வெங்காயம் (நான்கு எண்ணிக்கை) சேர்த்துக் கஷாயம் செய்து குடித்து வந்தால் தைராய்டு கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.அதேப் போல் ஹைப்போ தைராய்டிசத்தால் உதிரும் தலைமுடியைக் குறைக்க ரோஸ்மேரி எண்ணெயை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யலாம். இப்படி தினமும் செய்து வந்தால் விரைவில் ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 

💊அஸ்வகந்தா 💊

தினமும் 500 மிகி அஸ்வகந்தா கேப்சூல் தினமும் உட்கொண்டு வாருங்கள். அதுவும் ஒரு நாளைக்கு 1-2 முறை சாப்பிடுங்கள். இதனால் அஸ்வகந்தா தைராய்மு ஹார்மோன்களின் குறைபாட்டை சரிசெய்யும். மேலும் அஸ்வகந்தா ஒருவரது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் மற்றும் ஸ்டாமினாவை மேம்படுத்த உதவும். 

💊அயோடின் 💊

10-12 மிகி அயோடின் சப்ளிமெண்ட்டுக்களை தினமும் உட்கொள்ள வேண்டும். இப்படி 6 மாதம் முதல் 1 வருடம் வரை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அயோடின் குறைபாட்டினால் ஏற்பட்ட ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இருப்பினும் இம்மாத்திரையை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். 

💊ஆளி விதை💊

 1 டேபிள் ஸ்பூன் ஆளி விதை பொடியை ஒரு டம்ளர் பால் அல்லது பழச்சாறுடன் சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் 1-2 முறை குடித்து வர வேண்டும். 

இதனால் அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவும். மேலும் இதில் உள்ள மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி12, ஹைப்போ தைராய்டு பிரச்சனையின் அறிகுறியை எதிர்க்கும். 

முக்கியமாக ஒரு நாளைக்கு 2 டேபிள் ஸ்பூனுக்கு மேல் ஆளி விதையை சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், எதிர்மறை விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

💊தேங்காய் எண்ணெய் 💊

தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் தேங்காய் எண்ணெயை சூடேற்றக்கூடாது. இதனால் அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, ஹைப்போ தைராய்டு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். முக்கியமாக தேங்காய் எண்ணெய் ஹைப்போ தைராய்டு பிரச்சனையால் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவும். 

💊இஞ்சி 💊

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி கொதி வந்ததும், 1 இன்ச் இஞ்சியைத் தட்டிப் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குளிர்ந்த பின் தேன் சேர்த்து கலந்து குடியுங்கள். வேண்டுமானால் அன்றாட சமையலிலும் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். 

இப்படி இஞ்சி டீயை தினமும் 3 முறை குடிக்கவும். இதனால் இஞ்சியில் உள்ள பொட்டாசியம், மக்னீசியம், பாலிபீனாலான ஜின்ஜெரால், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்ற மருத்துவ குணங்கள், ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளித்து நிவாரணம் அளிக்கும். 

💊கருப்பு வால்நட்ஸ் ஓடு 💊

ஒரு டம்ளர் நீரில் 2-3 துளிகள் கருப்பு வால்நட்ஸ் ஓட்டின் சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என நல்ல மாற்றம் தெரியும் வரை பின்பற்றுங்கள். பழங்காலத்தில் ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்க கருப்பு வால்நட்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான அயோடின், செலினியம், மக்னீசியம், பி வைட்டமின்கள், வைட்டமின் சி செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ஹைப்போ தைராய்டு பிரச்சனையையும் எதிர்த்து சரிசெய்ய உதவும். 

🔴 குறிப்பிட்ட வைட்டமின் குறைபாடுகள்❓

ஹைப்போ தைராய்டு ஒருவருக்கு குறிப்பிட்ட வைட்டமின்களான 

வைட்டமின் பி12 குறைபாட்டினாலும் வரும். வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை தொடர்ச்சியாக உட்கொள்வதன் மூலம், ஹைப்போ தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கலாம். 

வைட்டமின் பி12 தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டைத் தூண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ஹைப்போ தைராய்டிசத்தை மோசமாக்கும் மன அழுத்தத்தை எதிர்க்க உதவும். இந்த வைட்டமின்களின் அளவை ஒருவரது உடலில் உணவுகளின் மூலம் எளிதில் அதிகரிக்கலாம். அதற்கு சிட்ரஸ் பழங்கள், பச்சை இலைக் காய்கறிகள், மீன், இறைச்சி, முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். 

💊வெங்காய வைத்தியம்💊

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன் சிவப்பு வெங்காயத்தை பாதியாக வெட்டி, அதன் சாற்றினை எடுத்து கழுத்துப் பகுதியில் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

பின் அதைக் கழுவாமல், இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

இப்படி செய்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாடு தூண்டப்படுவதோடு, அது சீரான அளவில் தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

மேலும் வெங்காயம் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, சுத்தம் செய்வதோடு, சருமத்தில் உள்ள கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.

💊💊 மேலும் சில…………💊💊💊

√√ தைராய்டு காரணமாக கழுத்தில் கழலைக் கட்டி வந்தவர்கள் தும்பை இலைகளை மையாக அரைத்துப் பற்று போட்டு வந்தால் நாளடைவில் கட்டிகள் கரையும்.

√√ தைராய்டு பிரச்னைக்கு இந்துப்பு மிகவும் நல்லது. இதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு உள்ளது. எனவே இந்துப்பை சமையலில் சேர்த்து வந்தால் தைராய்டு பிரச்னை சரியாகும்.

√√ தொட்டாசினிங்கி சமுகத்தை (இலை,தண்டு,வேர்,அனைத்தும்) ஒருவருக்கு ஒரு வேலைக்கு  5 கிராம் முதல் 1௦ கிராம் நீரிலே இட்டு அத்துடன் வால்மிளகு, உப்பு சிறிது சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி குடித்து வந்தால் தைராய்டு, வெள்ளைபடுதல், இரத்த வாந்தி, சீதபேதி போன்ற அதிகமாக சுரக்கும் சுரப்பிகளை சமன்செய்யும்.

√√ தொட்டாசினிங்கி சமுகத்தை (இலை,தண்டு,வேர்,அனைத்தும்) எடுத்து பசையாக்கி தைராய்டு வீக்கம், நெறிகட்டிய வீக்கம், விரைவீக்கம் போன்ற எந்த வீக்கத்தின் மீதும் தடவிவந்தால் வீக்கம் குறையும்.

√√ களச்சிக்காய் உள்ளே உள்ள ஒரு பருப்புடன் ஐந்து மிளகு சேர்த்து மென்று திண்ருவர தைராய்டு கட்டி அல்லது ஆங்காங்கே உண்டாகும் இரத்த கட்டி மற்றும் எந்த கட்டியாக இருந்தாலும் கரைந்துவிடும். 

√√ ஆடதோடா இலையின் ஒரு பெரிய இலையை எடுத்து (ஒருவருக்கு) அதை 7 துண்டுகளாக வெட்டி அதில் ஒரு துண்டுடன் 5 மிளகு, சிறிதளவு சுக்கு சேர்த்து மூன்றையும் இடித்து சிறிது நீரிலிட்டு கொதிக்கவைத்து அத்துடன் பனைவெல்லம் சேர்த்து டீ போல குடித்துவர தைராய்டு கட்டுப்படும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.