கல்வியில் சமூக மாற்றம்

இன்றைய நவீன யுகத்தில் கல்விக்கான அனைத்து வாய்ப்பு, வசதிகள் மற்றும் சந்தர்ப்பங்கள் என்பன திறந்து விடப்பட்டுள்ளன. ஒருவர் துறையொன்றில் அல்லது பல துறைகளில் ஆழமாக கால் பதிக்க இது வழிவகுத்துள்ளது. சமூக மாற்றத்தினை வழிநடத்துவத்திலும் பிரதான பங்கு கல்விக்கு உண்டு. சமூக மூலதனங்கள், ஒற்றுமை, சகிப்புத்தன்மை,ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் நட்புணர்வு ஆகியவற்றை சமூக கட்டமைப்புக்குள் பலப்படுத்துவதிலும் கல்வியின் பங்களிப்பு முதன்மையானது.

அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி வழங்குதல் என்பதை குறிக்கின்றது. இந்த அறிவியல் யுகத்தில் நாமும் இணைந்து கொள்ள, மேலும் அதன் சவால்களுக்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் கல்வியறிவு பெற்றிருப்பது அவசியமாகும். கல்வி, சமூகம் என்ற இரு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட என்னக்கருக்களாகும். கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதால் கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகின்றது.

பல்வேறு சமூகம் சார் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வினை பெற்றுத் தருவது கல்வியாகும். அறிவு,திறமை போன்றவற்றை வழங்கி ஓரு புதிய சமுதாயத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை போன்றவற்றை வழங்கி ஓரு முழுமையான ஆற்றல் படைத்தவனாக கல்வி மாற்றுகின்றது. ஓரு சமூகத்தின் முன்னேற்றம் சமூக நகர்வு, சமூக வளர்ச்சி, எழுச்சி, அபிவிருத்தி என்பன அச்சமூகத்தின் கல்வியை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகின்றது.

இன்றைய உலக மாற்றங்களுக்கேற்ப யுனெஸ்கோவின் " Education for all "(யாவருக்கும் கல்வி )என்ற பிரகடனம் எந்தவொரு நாட்டிற்கும், அணைத்து சமூகத்திற்கும் பொருந்தும். பிளட்டோ கூறுகிறார் கல்வியால் கிடைக்கின்ற நன்மை யாதெனில் நல்ல மனிதர்கள் உருவானது மட்டுமல்லாது அவர்கள் நல்ல முறையில் செயலாற்றவும் பழகிக்கொள்கிறார்கள். ரூசோ குறிப்பிடுகையில் பிள்ளைக்கு கல்வியை தனது ஆற்றல்கள், தேவைகள், விருப்பங்கள் என்பவற்றுக்கு எற்ப பெற்று கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

கல்வி என்பது அனுபவங்களை ஓழுங்குபடுத்துவதும் மீள அமைப்பதுமாகும். கற்றல் அனுபவம் மிக முக்கியமான ஒன்றாகும். கல்வியானது கற்றல் அனுபவத்தை தருகின்றது. அது மாணவரின் உடல், உள, மன வளர்ச்சி, உணர்வு வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை பெற உதவுகின்றது.

கற்றல் அனுபவத்தில் ஓரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, விளையாட்டு, செயற்திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழு வேலை போன்றவற்றில் காணப்படுகின்றது. மகாத்மா காந்தி கல்வி பற்றி தனது கருத்தில் கல்வியானது சகல பிரிவுகளிலும் தனியாளிடமுள்ள ஆற்றல்களில் உச்ச விருத்தி மூலம் நிறைவேற்றப்படல் வேண்டும் என கூறினார்.

நமக்கான சமூகத்தை உருவாக்குவதிலும் நல்லொழுக்கத்திலும் ஆழமான நற்சிந்தனையும்,அகலமான அறிவையும் உறுதிப்படுத்த கல்வி அவசியம் என்பதை மறுக்க முடியாது. வாழ்வின் அணியாகவும், தாழ்வின் துணையாகவும், வளர்ச்சியில் அணிகலனாகவும் அமைவது கல்வியாகும்.

சமுதாயத்தில் காணப்படும் கல்லாமை, இல்லாமை, இயலாமை போன்ற ஆமைகளை விரட்டி சமூகத்தை நீதி, நேர்மை மிக்க சமுதாயமாக இயங்க வைப்பதற்கு கல்வி மட்டுமே அடித்தளமாக அமையும்.கல்வி பிள்ளைகள் மூளைக்குள் புதிதாக எதையும் தினிப்பது அல்ல மாறாக குழந்தைகளின் உள்ளத்தில் திணிக்கபட்டிருக்கும் நம்பிக்கைகளை அகற்றி சுயசிந்தனை உடையவராக மாற்றுவதேயாகும். நமது சமூக கட்டமைப்பில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் முக்கோண கோட்பாட்டின் சமூகத்தின் இயல்பாக நிலைநிறுத்துவதே கல்விதான். தனி மனித பலவீனத்தை அகற்றி தனி மனிதர்கள் சமூக கட்டுகோப்புக்கு உரியவராக மாற்றும் பணியை கல்வி மட்டுமே முன்னெடுக்கிறது.

       வீரகுமார் வினிதா

கல்வியியல் மற்றும் பிள்ளை நலத்துறை, இரண்டாம் வருடம் சிறப்பு கற்கை, கிழக்கு பல்கலைக்கழகம் வந்தாறுமூலை.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.