முதுமையில் தனிமை

தன் பிள்ளைகளால் கைவிடப்பட்டு  முதுமையில் தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணம் 

அடைகிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

டென்மார்க்கைச் சேர்ந்த கோபன்கேகன் பல்கலைக் கழக ஆஸ்பத்திரியைச் சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.

13,463  இதில் ஈடுபடுத்தப்பட்டனர். அதற்கு பதில் அளித்த அவர்கள்.,

"தனிமைக் கொடுமையால் தான் பல நோய்கள் தங்களுக்கு ஏற்பட்டது" என்றனர். 

தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.

இதேநிலை தொடர்ந்தால் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலே சுட்டிக் காட்டப்பட்ட செய்திப்படி தனிமை இனிமை தரும் என்பதை விட, தனிமை இனிமை தராது,கொடுமையான மரணத்தைத் தான் தரும் என்பது இந்த ஆய்வுகளால் நமக்கு உணர்த்தப்படுகிறது.

ஆம்.,நண்பர்களே.,

முதுமையில் தன் பிள்ளைகளால் கைவிடப்பட்டோர், தனிமையில் தவிப்பவர்கள், நம்மைக் கரையேற்ற யாரேனும் படகோடு வருவார்கள் எனக் காத்திருக்காமல் எதிர்நீச்சலடித்து கரைச் சேர முயல வேண்டும்.

ஏதேனும் செல்லப்பிராணி வளருங்கள். அதனுடன் நேரத்தை செலவிடுங்கள். 

தினமும் புத்தகம் படிப்பது, நல்ல இசை கேட்பது, பழைய புகைப்பட ஆல்பங்களைப் பார்ப்பது, நண்பர்களுடன் வாரம் ஒரு முறை பேசுவது, பிடித்த வேலையில் ஈடுபடுவது இவைகள் தனிமையைப் போக்கும் அருமருந்துகள். 

வசதியானவர்கள்  பிறரை மகிழ்விக்க நம்மால் ஆன உதவிகளைச் செய்யலாம். ஏதேனும் சமூகத் தொண்டில் ஈடுபடுங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.