கழிப்பறைப் பயிற்சியை குழந்தைக்கு எப்போது தொடங்கலாம்?

👉 6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். 

சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது. ஆனால், வளர வளர குழந்தைகளுக்கு இயற்கை கழிவுகள் வருகின்றன எனச் சொல்ல தெரியும். 

அதற்கான பயிற்சியை எப்போது தொடங்குவதுஎப்படித் தொடங்குவது?

🔰பார்க்கலாம் வாங்க

குழந்தைகளுக்கு சிறு வயதிலே காலை கடன் பற்றிய முக்கியத்துவத்தை சொல்லி தர வேண்டும். தொடக்கத்திலே சொல்லி தருவது மிகவும் முக்கியம்.

🈷 4-5 மாத குழந்தைகள் 🈷

முகம் சுளிப்பது, உடலை முறுக்குவது, வாயைக் குவிப்பது போன்ற சமிக்கைகளை வைத்தே குழந்தை சிறுநீரோ மலமோ கழிக்க போகிறது எனப் பெற்றோர் யூகிக்க வேண்டும்.

🈸6 மாத குழந்தைகள்🈸

பொதுவாக, குழந்தைகள் தூங்கி எழுந்த பின் சிறுநீர் கழிப்பார்கள். அல்லது குழந்தை மலம், சிறுநீர் கழிக்க போகிறது என நீங்கள் யூகித்தால் அப்போதே குழந்தையை தூக்கி கொண்டு கழிப்பறைக்கோ அல்லது சரியான இடத்துக்கோ செல்லுங்கள். அப்போது ‘ஸ்ஸ்ஸ்’ எனச் சொல்லி குழந்தையை சிறுநீரோ மலமோ கழி எனச் சொல்லுங்கள். இதெல்லாம் குழந்தை புரிந்து கொள்வதற்கான டெக்னிக். ஒவ்வொரு முறை தூங்கி எழுந்த பின்னும் குழந்தையை தூக்கி கொண்டு, பேன்ட் அல்லது டயாப்பரை கழற்றி கழிப்பறை தரையில் நிற்க வைத்தோ உட்கார வைத்தோ சிறுநீர் போ எனச் சொல்லி பழக்கினாலே குழந்தைகள் மெதுவாகப் புரிந்துகொள்வார்கள். கீழே அணிந்திருக்கும் ஆடையை கழற்றினால் சிறுநீர் மலம் கழிக்க வேண்டும் எனக் குழந்தைகள் புரிந்து கொள்ளும். இதற்காக குழந்தைக்கு அதிக பிரஷரோ திட்டுவதோ அடிப்பதோ கூடாது. சில குழந்தைகள் புரிந்து கொள்ளும். சில குழந்தைகளுக்கு புரியாது. இது வெறும் பயிற்சிதான் கட்டாயம் அல்ல.

🈺9 மாத குழந்தைகள்🈺

குழந்தை சிறுநீர் கழிக்கும் சமிக்கைகளை செய்தால், பாப்பாக்கு சிறுநீர் வருதா, பாத்ரூம் போகலாமா எனக் கேளுங்கள். அதன்படி அழைத்தும் செல்லுங்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையைப் பழக்கப்படுத்தலாம். பொதுவாக குழந்தைகளுக்கு தாயோ தந்தையோ பெரியவர்களோ கழிப்பறைக்கு சென்றால் சிறுநீர் கழிக்க சென்று இருக்கிறார்கள் எனச் சொல்லுங்கள். இதனால் கழிப்பறையில்தான் மலம், சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் குழந்தைகளுக்கு புரியும். 

🈷 எப்போது கழிப்பறை பயிற்சியைத் தொடங்கலாம்❓🔰

⭐14 - 15 மாதங்களுக்கு பின்பு தானாக உட்கார்ந்து மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பதற்கானப் பழக்கத்துக்கு குழந்தைகள் வருவார்கள். இந்த வயதுக்கு பின்னும் இந்தப் பழக்கத்துக்கு வரவில்லை என்றால், பெற்றோர் கட்டாயம் கழிப்பறைப் பயிற்சியைக் கொடுத்தாக வேண்டும்.

💢 எந்தப் பருவத்தில் கழிப்பறை பயிற்சி தரலாம்❓

கழிப்பறைப் பயிற்சி தொடங்கும் முன் பேன்ட், ஜட்டி, பாவாடை போன்றவற்றை கழற்ற குழந்தைக்கு கற்று தர வேண்டும்.

ஒருவேளை ஆடையில் சிறுநீர் மலம் கழித்துவிட்டால்கூட எப்படி பக்குவமாக கழற்றுவது என சொல்லி தர வேண்டும்.

அதன் பின் தானாக ஆடைகளை மாட்டி கொள்ளும் முறையும் குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

நடக்க ஆரம்பித்த குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சி சொல்லி தரலாம்.

குழந்தைகளுக்கு மலம் கழிக்க தற்போது பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டிகள் கிடைக்கின்றன. அதில் அமர வைத்துப் பழக்கலாம்.

குழந்தையை தினமும் இந்திய கழிப்பறையில் உட்கார்வது போல அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம். இப்படிதான் உட்கார வேண்டும் என சொல்லிக் கொடுக்கலாம்.

தினமும் 6-10 முறை சிறுநீர் கழிக்கவும் 1 அல்லது 2 முறை மலம் கழிக்கும் பழக்கத்துக்கும் குழந்தைகளை கொண்டு வர வேண்டும். காலைக்கடன்களைக் கழிக்கும் பயிற்சியை சொல்லி தர வேண்டும்.

சிறுநீரோ மலமோ கழிக்க வேண்டும் என உணர்வு வந்தவுடன் அம்மா, அப்பா அல்லது அருகில் இருப்பவரிடம் சொல்ல வேண்டும் எனக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள்.

இதை ஒரு நாள், இரண்டு நாள் மட்டும் சொல்லிவிட்டு நிறுத்த கூடாது. தினந்தோறும் சொல்லி குழந்தைக்கு புரிய வையுங்கள்.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் இந்திய கழிப்பறையை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் வெஸ்டர்ன் கழிப்பறைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு நல்லதல்ல.

சாதாரணமாக குழந்தைகளுக்கு குத்துகாலிட்டு உட்கார சொல்லிக் கொடுங்கள். இப்படி உட்கார்ந்து மலம், சிறுநீர் கழிக்க வேண்டும். இப்படி உட்கார்ந்து கழித்தால் மலம் எளிதில் வெளியேறும் எனச் சொல்லி கொடுக்க வேண்டும்.

கழிப்பறையில் இப்படி உட்கார வேண்டும் எனப் பெற்றோர் டெமோ செய்து காண்பிப்பது இன்னும் நல்லது. நம் குழந்தைக்கு நாம்தான் சொல்லி தர வேண்டும். அது நம் கடமை.

இந்திய கழிப்பறை இல்லாத வீட்டில் வெஸ்டர்ன் கழிப்பறை மட்டும் இருந்தால் குழந்தைக்கென டாய்லெட் சீட் வாங்கி, கழிப்பறையில் பொருத்தி அதில் குழந்தையை அமர வைத்துப் பழக்கப்படுத்தலாம்.

2 வயது முடிந்த குழந்தைகளுக்கு இதுவரை பிளாஸ்டிக் கழிப்பறை தொட்டியில் மலம் கழித்துக் கொண்டிருப்பதை நிறுத்தி, கழிப்பறையில் எப்படி மலம் கழிப்பது எனச் சொல்லி கொடுக்கலாம்.

கழிப்பறையில் மலம் கழிக்க சில குழந்தைகள் பயப்படும். எனவே, பெற்றோர் பயத்தைப் போக்க முயற்சிக்க வேண்டும். 

நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய். பெட்ரூம், ஹால், கிச்சன் போன்ற இடங்களில் எல்லாம் மலம் கழிக்க கூடாது. கழிப்பறையில்தான் மலம் கழிக்க வேண்டும் எனப் பக்குவமாக சொல்லி புரிதலை ஏற்படுத்துங்கள்.

காலைக் கடன்களை அதாவது மலம் கழிப்பதை கழிப்பறையில் செய்வதுதான் நல்லது. அதுதான் சுத்தம், ஒழுக்கம். கிருமிகளும் பரவாது எனச் சொல்லுங்கள்.

ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் மிக விரைவில் கழிப்பறை பயிற்சிகளைக் கற்றுக்கொள்வதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

🉐 எந்த வயதுக்குள் குழந்தைகள் தானாக சுத்தப் படுத்திக்கொள்ள வேண்டும்❓

மலம் கழித்த பிறகு, தங்களைத் தானாக சுத்தம் செய்துகொள்ளவும் கற்று தருதல் நல்லது. சுத்தம் செய்து கொள்ளும் முறையை 5-6 வயதுக்குள் கற்றுத் தந்திட வேண்டும். மலம் கழித்த பின் எப்படி சுத்தம் செய்வது எனக் குழந்தைக்கு பெற்றோர் சொல்லி தருவதும் முக்கியம். முன்னிருந்து பின் கழுவுதல்தான் சரி, பின்னிருந்து முன் கழுவ கூடாது எனச் சொல்லுங்கள். இதனால் தொற்றுகள் பரவாமல் தடுக்கப்படும்.

♻️ மலம் கழிக்க சிரமப்படும் குழந்தைகளை என்ன செய்யலாம்❓

மலச்சிக்கலோ பயமோ அல்லது வேறு எதாவது பிரச்னையா எனக் கவனியுங்கள். மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கலாம். காலையில் மலம் கழிக்க பழக்கப்படுத்தும் முறைகளை குழந்தைக்கு சொல்லி கொடுங்கள். சரியான நேரத்துக்கு தூங்குவது, எழுந்திருப்பது, சாப்பிடுவது என அனைத்தும் சரியாக இருந்தாக மலம் கழிப்பதும் சரியாக இருக்கும். சிறு குழந்தைகளுக்கு கருப்பு உலர் திராட்சை, அத்திப்பழம், கருப்பு திராட்சை, பேரீச்சை பழம், கடுக்காய்ப்பொடி எனச் சின்ன சின்ன கைவைத்தியங்கள் மூலம் மலச்சிக்கலை எளிதில் போக்கிவிடலாம். இதையும் 

♑ குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கும் வீட்டு வைத்தியம்…❓

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்பது சொல்ல முடியாத ஒரு தொந்தரவு. மிகவும் கஷ்டப்படுவார்கள், அழுது கொண்டும் இருப்பார்கள். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கவும் மலச்சிக்கல் வந்தால் சரி செய்யவும் வீட்டு மருத்துவ முறைகள் உள்ளன. 

அவற்றைத் தெரிந்து கொண்டால் குழந்தைகளை இந்த மலச்சிக்கல் தொந்தரவுகளிலிருந்து பாதுகாக்கலாம்.

📌 0-6 மாத குழந்தைகள்…

தாய்ப்பாலை முறையான இடைவேளியில் சரியாக கொடுத்தாலே மலச்சிக்கல் தொந்தரவு வராது. இதனுடன் பாலூட்டும் தாய், கீரைகள், பூண்டு, காய்கறி, பழங்கள், கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், பருப்பு - பயறு வகைகள் போன்ற நல்ல தரமான உணவுகளை சாப்பிடுவதும் முக்கியம். இப்படி முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றி வரும் தாய்மார்கள் பாலூட்டி வந்தாலே குழந்தைக்கு மலச்சிக்கல் தொந்தரவு இருக்காது.

⭐ 6 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் மலச்சிக்கல் தொந்தரவுகளை நீக்கும் வழிகள்... 

👉பாலூட்டும் தாய்மார்களின் உணவுப் பழக்கம் சரியாக இருக்க வேண்டும்.

👉தாயின் மனநிலை, மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முக்கியம்.

👉குழந்தை பாதுகாப்பான உணர்வை உணர்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள்.

👉தாயின் அரவணைப்பும் அன்பும் மிகவும் முக்கியம்.

👉ரப்பர் மேட்டில் குழந்தைகளைப் படுக்க வைக்க கூடாது.

✅மலச்சிக்கல் நீங்க வீட்டு வைத்திய முறைகள்…

👉 திராட்சை சாறு

பச்சை திராட்சை அல்லது கறுப்பு திராட்சை - 8, எடுத்துக் கொள்ளவும்.

அரை மணி நேரம் சாதாரண தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவவும்.

பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் இந்த 8 திராட்சைகளைப் போட்டு 

1 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

திராட்சைகள் நன்கு ஊறி, பாதி வெந்து விடும். பின்னர், இந்த திராட்சைகளையும் 

3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு மத்தால் நன்கு மசித்து சாறு எடுக்கவும்.

இந்த சாறை வடிகட்டி, தினமும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்கவே இருக்காது.

👉இளஞ்சூடான தண்ணீர் மேஜிக்

குழந்தைகளுக்கு எப்போதுமே இளஞ்சூடான தண்ணீரைக் கொடுக்க வேண்டும்.

ஜூஸ் கொடுத்தாலும் அதில் இளஞ்சூடான தண்ணீரைக் கலப்பது நல்லது.

போதுமான அளவு குழந்தைக்கு தண்ணீர் தருகிறீர்களா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

👉வாழைப்பழ கூழ்

வாழைப்பழத்தைக் கரண்டியால் நன்கு மசித்து கூழாக்கி அதில் டேட்ஸ் சிரப் ஊற்றிக் கொடுக்கலாம். தினமும் ½ கப் அளவுக்கு இதைக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கல் நீங்கிவிடும்.

👉 சப்போட்டா கூழ்

சப்போட்டாவை பாதியாக அறிந்து மேலிருக்கும் கொட்டைகளை நீக்கிவிட்டு, ஸ்பூனால் அதன் சதைப்பகுதியை எடுத்து ஸ்பூனால் நன்கு மசித்துக் கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்து வர மலச்சிக்கல் இருக்காது.

உலர்திராட்சை டானிக்

உலர் திராட்சை - 15, எடுத்துக் கொள்ளவும்.நன்கு கழுவி விடவும்.

அரை டம்ளர் வெந்நீரில் உலர்திராட்சை 4 மணி நேரம் அல்லது இரவு முழுக்க ஊற விடவும்.

ஊறியதும் தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து அதை நன்கு வடிகட்டி, குழந்தைக்கு கொடுக்கவும்.

இதைத் தொடர்ந்து செய்தாலே குழந்தைகளுக்கு மலச்சிக்கல் தொந்தரவுகள் இருக்காது.

 👉இளஞ்சூடான ஒத்தடம்

ஒத்தடம் பேக்கில் இளஞ்சூடான தண்ணீர் ஊற்றி அதைக் குழந்தைகளின் வயிற்று, முதுகு பகுதியில் ஒத்தி ஒத்தி ஒத்தடம் கொடுப்பது போல செய்யுங்கள்.

இதனாலும் மலச்சிக்கல் தொந்தரவு நீங்கும்.

👉 பப்பாளி கூழ்

பப்பாளி கூழ் அவ்வப்போது குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் நீங்கிவிடும்.

👉 கொய்யா ஜூஸ்

கொய்யா பழத்தை சிறிது சிறிதாக அறிந்து, விதை நீக்கி, ஜூஸ்home  எடுத்து வடிகட்டி 

½ டம்ளர் அளவுக்கு குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

👉 இஞ்சி டிரிங்க்

ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன் கலந்து அரை டம்ளர் இளஞ்சூடான நீரில் கலந்து கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

இதை 8 மாதத்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

👉ஆப்பிள்

ஆப்பிளை நன்கு கழுவித் தோலை நீக்கி கொள்ளுங்கள்.

ஆப்பிளை துண்டு துண்டாக அறிந்து கூழாக்கி கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் டேட்ஸ் சிரப் கலந்து குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

🔴 கைவைத்தியங்கள் செய்த பின்னும் மலச்சிக்கல் தொடர்ந்தால் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.