தோல்வி என்றால் என்ன ?

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல. 

நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.

தோல்வி என்றால் நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல. சில பாடங்களைக் கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாக பொருள் இல்லை.

முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.

தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை.

மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று பொருள்.

தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.

தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல அடைய கொஞ்சம் காலம் தாமதமாகலாம் என்று பொருள்.

தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை. உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்து இருக்கிறார் என்று பொருள்..

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.