காலை நேர சிந்தனை

எவர் ஒருவரும் உங்கள் வாழ்க்கைப்பயணத்தைப் புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் இங்கு வாழ்வது உங்களது வாழ்க்கையை வாழத்தானே தவிர உங்களைப் புரிந்து கொள்வதற்காக அல்ல.

வெளியில் இருந்து நாம் பெறுவது தகவல். அதை பாதுகாப்பது அறிவு. அதை புரிந்து கொள்வது. புத்திசாலித்தனம். ஆனால், எங்கே, எப்படி, எப்போது பயன்படுத்துவது என்பது ஞானம்.

தேடல் முடிந்த பின்பும் பயணம் முடிவதில்லை. தேடல் எதுவென உணர்வதற்குள் நீள்கிறது பயணத்தின் பாதை.

பாதையும் பயணமும் எதை தேடுவதென உணர்வதற்குள் வாழ்க்கை முடிந்திடும் போல. தீரா தேடலோடு பாதை எதுவென உணர்ந்திடாத பயணமே வாழ்க்கை.

அசைக்க முடியாத ஆழ்ந்த அமைதியில் ஆற்றல் உயிர்ப்பிக்கிறது. அமைதியும் பொறுமையும் உன்னதம் நிறைந்த வாழ்வின் வளமான வரமே.

சாந்தமான அமைதியில் வாழ்க்கைப் புத்துணர்வுடன் வலிமையும் பெறுகிறது.

முடியாததைப் பின்னொரு நாள் நிச்சயமாக அமைதியின் ஆற்றலோடு சாத்தியமே.

வாழ்வியல் முன்னேற்றத்துக்கான அமைதியில் எடுக்கப்படும் முயற்சி என்றும் இனிமை நிறை ஆனந்தமே. ஆழ்ந்த அமைதியும் நீடித்தப்  பொறுமையும் வாழ்வின் பேரின்பமே.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.