அறிவு வளம் தொடர் வெற்றிக்கு அடித்தளம்

அறிவுச்சுடர் ஒளிரட்டடும்

அறியாமை விலகட்டும்

தொடர் முயற்சி தொடரட்டும்

வாழ்வெல்லாம் வெற்றி மலரட்டும்

வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பதற்கு அறிவு வளமே அடிதளம். அறிவின் எல்லை விரியும்போது உங்களுடைய வாழ்வின் எல்லையும் விரிகின்றது.  அதைத்தான் வளர்ச்சி என்று குறிப்பிடுகின்றோம்.

ஆக்கப்பூர்வமாக சிந்ததிப்பதன் விளைவுதான்  முயற்சியும் அதனால் கிடைக்கும் வளர்ச்சியும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, 

பணி முன்னேற்றம், பதவி உயர்வு போன்றவைகளைப் பெறுவதற்கு எவ்வளவு தூரம் விரைவாகவும், கூடுதலாகவும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்.  

அறிவு வளர்ச்சியின் அவசியம் புரியும்.  ஆகவே புதிய அறிவை வளர்த்துக் கொள்ள மனதை எப்பொழுதும் திறந்து வையுங்கள்.

📌சுய இயக்கம் தேவை

வாய்ப்பு வரும்போது கற்றுக்கொள்ளலாம் என்ற சராசரி மனநிலையிலிருந்து சற்று மாறி, மனதை சுயமாக இயக்கி புதியனவற்றைக் கற்று அறிவு வளத்தைப் பெருகிக்கொள்ளும் சுயமுன்னேற்ற மனிதராக நீங்கள் மாற வேண்டும். 

ஏனென்றால் வளர்ச்சி என்பது வாழ்வின் தத்துவம்.  முயற்சியே வளர்ச்சிக்கான வழியாகும்.  தொடர்ந்து முயல்பவர்கள் மென்மேலும் வளர்ந்து வளம் பெறுகின்றார்கள். 

சூழ்நிலையைக் குறை கூறிக்கொண்டு, முடங்கிக் கிடப்பவர்கள் விரக்தியின் மடியில் சோகக் கனவுகளாகின்றார்கள். தொடர்ந்து முயல்பவர்களே வெற்றி வானில் மகிழ்ச்சிச் சிறகுகளை விரிக்கின்றார்கள்.

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் புதுப்புது பாடங்களைக் கற்றுக் கொண்டு, அதை முதலீடு செய்து தொடர்ந்து முன்னேறுபவர்களே ஒரு நிறுவனத்தின் நிலையான பலமாக அமைகின்றார்கள். 

மேலும் உங்களுக்குக் கிடைத்துள்ள பதவியையும், அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும். 

ஏனென்றால், தொடர்ந்து முயற்சி செய்யாதவருக்கு வெற்றியும், தொடர்ந்து முயற்சி செய்பவருக்கு ஏற்பட்ட தோல்வியும் நிலையானது அல்ல.  

ஆகவே, தொடர்ந்து முயலும் இயல்புடைய மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் தொழிற்போட்டிகளை வென்று உங்கள் நிறுவனத்தால் நிலைத்து நிற்க முடியும். 

 நிறுவனம் நிலைத்தால்தான் அதில் பணிபுரியும் உங்களுடைய பணியும் அதனைச் சார்ந்த உங்களுடைய வாழ்வும் நிலைக்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

By சக்தி


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.