அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வெந்தயம் பற்றிய தகவல்கள்

வெந்தயம் நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு மசாலா பொருள். சிறிது கசப்புத் தன்மை கொண்ட இந்த வெந்தயம் அதிகளவு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கிறது.

இந்த வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் ஆரோக்கிய மாற்றங்களை இணங்காணலாம்.​​

✅1.கொலஸ்டிரால் பிரச்சினை

தொடர்ச்சியாக வெந்தயத்தை உணவுகளில் சேர்த்து வருவதன் மூலமோ அல்லது வெந்தய தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலமோ உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிரால் கரைந்து வெளியேறும்.

குறிப்பாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கார்டியோ வாஸ்குலர் போன்ற நோய்களை விரட்ட உதவி செய்யும்.

✅​2.ஆஸ்துமா பிரச்சினை

வெந்தயத்தில் உள்ள பல மூலக்கூறுகளில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும்.

அதனால் ஆர்ததரைடிஸ், ஆஸ்துமா போன்ற இன்ஃபிளமேஷன்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வெந்தய நீரைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளலாம்.​

✅3.அஜீரணக் கோளாறு

தினமும் வெந்தய நீரைக் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிறு உப்பசம் ஆகிய பிரச்சினைகளைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

அதோடு உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவி செய்யும்.

✅​​4.இரத்த சர்க்கரை

வெந்தயம் நீரிழவு நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரத்தத்தில் சர்க்கரையின்அளவு எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அதை குறைத்து கட்டுக்குள் கொண்டு வரும் பண்பு வெந்தயத்துக்கு உண்டு.

தினமும் காலை வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடித்து வர ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

✅5.எடைக் குறைப்பு​

வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம். அதனால் இதில் உடல் எடையைக் குறைக்கும் பண்புகள் அதிகம். பசியைக் கட்டுப்படுத்தி அதிக கலோரிகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் செய்வதால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் சீராகக் குறைய ஆரம்பிக்கும்.​​

✅6.​நோயெதிர்ப்பு சக்தி

வெந்தயத்தில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இதை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் நோய்த் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்க உதவி செய்யும்.​​

✅7.ஆரோக்கியமான தலைமுடி

வெந்தயம் தலைமுடியை பளபளப்பாகவும் பட்டு போல மென்மையாகவும் வைத்திருக்க உதவி செய்யும். தலைமுடியைப் பராமரிக்க வெந்தயத்தை வெளிப்பூச்சாகவும் அப்ளை செய்யலாம்.

உள்ளுக்குள் வெந்தய நீர், வெந்தய களி போன்ற வகைகளிலும் எடுத்துக் கொள்ளலாம்.

📌 தினமும் அருந்தும் முறை

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு வெந்தயத்தைச் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும்.

காலையில் எழுந்ததும் அந்த தண்ணீரை அப்படியே குடித்துவிட்டு வெந்தயத்தையும் சாப்பிட்டு விடலாம். ஒருவேளை இரவு முழுக்க ஊற வைப்பது அதிக கசப்பாக இருப்பதால் நீங்கள் நினைத்தால் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் வெந்தயத்தைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து விட்டு உடனே குடித்து விடலாம்.

இரவு முழுவதும்  ஊறவைத்த வெந்தய நீரை கொதிக்க வைத்து டீ போலவும் குடிக்கலாம் (சர்க்கரை சேர்க்கக் கூடாது).

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.