இலங்கையும் மூன்றாம் நிலைக்கல்வியும்

இன்று எமது கல்வி முறையானது ஆட்சி முறைகள் மாற்றப்படும் போது புதிய பரிமாணத்தை எடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இலங்கையின் கல்வி கட்டங்களை மன்னர் ஆட்சி முறை, சுதந்திரத்திற்கு முற்பட்ட கால அன்னியர் ஆதிக்க கல்வி முறை, சுதந்திரத்திற்கு பிற்பட்ட கால சுதேசிய கல்வி முறை என வகைப்படுத்தி பார்க்கலாம்.

 இலங்கை கல்வி முறையானது மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது குறிப்பாக இலங்கை நாடானது 2300 ஆண்டுகளுக்கு முன் நாகரீகம் அடையத் தொடங்கியதில் இருந்தே கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றமை சிறப்பிற்குரியதாகும்.

வளர்முக நாடுகளினுடைய கல்வி முறையோடு இலங்கையின் கல்வி முறைகளை ஒப்பிடுகின்ற போது இலங்கையினுடைய கல்வி முறைமையானது போற்றத்தக்க ஒரு விடயமாகவே இருக்கின்றது. அதிலும் ஆரம்பக் கல்வி முதலாக பல்கலைக்கழக உயர் கல்வி வரையிலும் 55 ஆண்டுகள் கடந்த போதிலும் இன்னமும் இலவசக் கல்வியினை வழங்கி வருவது இலங்கையின் கல்வி முறைமையினுடைய ஒரு சிறப்பான செயற்பாடு என குறிப்பிட முடிகின்றது.

இத்தகைய பல் வகைப்பாடுகளைக் கொண்ட கல்வி முதலாம் நிலைக் கல்வி இரண்டாம் நிலைக் கல்வி மூன்றாம் நிலைக் கல்வி என்கின்றதான அடிப்படையான வகைப்பாடுகளைக் கொண்டு காணப்படுகின்றது;

இன்றைய நவீன கல்வியினுடைய ஓர் பிரதான அம்சமாகவும் மூன்றாம் நிலைக் கல்வியான உயர் கல்வியினை பல்கலைக்கழகங்கள் மாத்திரம் வழங்குகின்ற காலம் கடந்து பல்கலைக்கழகங்களுக்கு நிகரான பல நிறுவனங்கள் தோன்றி பல புதிய வகைக் கல்விக்கான வழிகள் திறக்கப்பட்டு இருக்கின்றமையும் ஓர் விசேடமான அம்சமாகும். 

உயர்கல்வியினுடைய முக்கியமான ஓர் நோக்கம் ஒருவருடைய வாழ்க்கைக்கு தேவையான வழிகாட்டலையும் அவர் வாழ்வதற்குரிய சிறந்த பாதையினையும் இட்டுக் கொடுப்பதற்கு தேவையான அறிவு திறன் ஆளுமை வழிகாட்டல் போன்றவற்றினை ஏற்படுத்தி கொடுத்து தொழில் தகைமையோடு தொழில் உலகினிற்குள் பிரவேசிக்கச் செய்வது ஆகும். 

உயர் கல்வித்துறையில் இலங்கையை அதிசிறந்த சர்வதேச மத்திய நிலையமாக நிலை பெறச் செய்தல் தொலை நோக்கு தகவல் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முகாமைத்துவ முறைமை ஒன்றை முன்னேற்றுதல் உயர் கல்வித் துறையின் வினைத்திறனையும் விளைவுப் பெருக்கத்தையும் அதிகரிப்பதற்காக தகவல் மற்;றும் தொடர்பாடல் தொழிநுட்பவியலை ஈடுபடுத்திக் கொள்வதும் மூன்றாம் நிலைக் கல்வியினுடைய நோக்கப்பாடுகளுக்குள் சுட்டப்படுகின்றன. 

மூன்றாம் நிலைக்கல்வி அல்லது உயர்கல்வி என்பது இளங்கலை மற்றும் முதுகலை கல்வி பட்டப்படிப்புக்களை உள்ளடக்கியதாக அமைகின்றது. அதே சமயம் இக்கல்வியானது இரண்டாம் நிலைக் கல்விக்கு பிந்தய தொழில்சார் கல்வி அல்லது பயிற்சி பொதுவாக பட்டப்படிப்பு சான்றிதழ்கள் போன்றவற்றினைப் பெறுவதுடன் முடிவடைகின்ற கற்கை முறையாக ஒழுங்கமைக்கப்பட்டள்ளது.

பிரித்தானிய அரசாங்கம் 1921ம் ஆண்டிலே பல்கலைக்கழகக் கல்லூரியை நிறுவியது. இலங்கையிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை மத்தியதர வர்க்கத்தினால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது இதற்கிணங்க கொழும்பு ரோயல் கல்லூரியில் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டது 

இதற்கிணங்க கொழும்பு ரோயல் கல்லூரி 1942 ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகமாகவும் பின்நாளில் பேராதனைப் பல்கலைக்கழகமாகவும் உருவாக்கப்பட்டது. 

2 ஆண்டுகளின் பின்னர் டிப்ளோமா பட்டமும் 3 ஆண்டுகளின் பின்னர் இளநிலைப்பட்டமும் 4 ஆண்டுகளின் பின் சிறப்புப்பட்டமும் 5 வருடங்களின் பின்னர் மருத்துவப்பட்டமும் வழங்கப்படுகின்றது. அத்துடன் MA, MBA, PHD பட்டங்கள் முதுநிலை டிப்ளோமாவில் 3 வருடங்கள் கழித்து வழங்கப்படுகின்றன. 

இலங்கையில் 1978 ஆம் ஆண்டின் 16ம் இலக்க திருத்தச்சட்டத்தின்படி பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு ஏற்புடையவர்கள் உள்வாங்கப்படுகின்றனர், இதற்கிணங்க கல்வியமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பல்கலைக்கழகங்கள் என இற்றைக்கு 17 பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. 

கொழும்புப்பல்கலைக்கழகம், பேராதனைப்பல்கலைக்கழகம்,களனிபல்கலைக்கழகம், ஜயவர்த்தனபுரபல்கலைக்கழகம், மொரட்டுவபல்கலைக்கழகம், யாழ்பாணபல்கலைக்கழகம், ருஹீணுபல்கலைக்கழகம், கிழக்குப்பல்கலைக்கழகம், ரஜரட்டைப்பல்கலைக்கழகம் ஊவாவெல்லஸ்ஸபல்கலைக்கழகம், தென்கிழக்குப்பல்கலைக்கழகம், இலங்கை சப்ரகமுவப்பல்கலைக்கழகம், இலங்கை வயம்பபல்கலைக்கழகம், இலங்கைதிறந்த பல்கலைக்கழகம்இ கட்புல அரங்கேற்றக்கலை பல்கலைக்கழகம்இ விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்இ வவுனியாப் பல்கலைக்கழகம் 

தகுதிகாண் அடிப்படையில் பல்கலைக்கழக நுழைவினைப்பெற்ற மாணவர்கள் தமது கற்கைநெறிக்கு ஏற்ப சான்றிதழ் உயர் சான்றிதழ் பட்டங்களை பெறக்கூடிய தகைமை பெறுவர். இது தவிர வேறு சில நிறுவனங்களும் இலங்கையின் பிந்தயபட்டப்படிப்பு நிறுவனங்களாக 07 நிறுவனங்கள் காணப்படுகின்றன. 

வேளாண்மை பித்தயபட்டதாரி நிறுவனம், மருத்துவ பட்டக்கல்வி நிறுவனம், பாளிமற்றும் பௌத்த சட்டக்கல்வி நிறுவனம், மேலாண்மை பட்டப்படிப்பு நிறுவனம், முதுகலைப்பட்டப்படிப்பு நிறுவனம், அறிவியல் பட்டப்படிப்பு கல்வி நிறுவனம், ஆங்கில முதுகலைப்பட்ட ஆய்வு நிறுவனம் என்பனவாகும்.

அடுத்ததாக மூன்றாம் நிலைக்கல்வியினை வழங்கும் பிரதான நிறுவனங்களுள் திறந்த பல்கலைக்கழகத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்கிணங்க 1980களில் திறந்த பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றதோடு இற்றை வரை சிறப்பாக இயங்கி வருகின்றது. திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி, பொறியியல், தொழில்நுட்பம் மனிதாபிமானம், மற்றும் சமூக கற்கைகள், இயற்கை விஞ்ஞானம் என்பன பீடங்களாகவும் உள்ளன. 

அத்துடன் 3ம் நிலைக்கல்வியில் உள்ளடங்கும் கல்வி நடவடிக்கைகளில் பிரதானமாகதொழிற்பயிற்சி அமைகின்றது. அந்தவகையில் 1940 காலப்பகுதியில் பல்கலைக்கழக சார்பு இல்லாத தொழிற்பயிற்சி, கல்வித்திட்டங்கள், தொழில்நுட்ப கல்வி என்பன மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

GCE சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் இடையில் விலகிவிடாது, கற்பவர் ஒவ்வொருவரும் தரம்-13 இன் இறுதிவரை தமது கல்வியைத் தொடர வழிசெய்யும் வண்ணம் 13 வருடக் கல்விக்கு உத்தரவாதமளிக்கும் அரசின் கொள்கைக்கு அமைய, கல்லூரி மட்டத்தில் தொழில்சார் பாடத்துறை என்னும் புதிய நிகழ்ச்சித்திட்டம் 2016 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 

மாணவர் தரம் 13 ஐப் பூர்த்தி செய்யும் போது தெரிவு செய்யப்பட்ட தொழிலுக்குரிய குறித்த திறன்களை அடைவதற்கு வழியமைக்கும் வகையில் இப் புதிய பாடத்துறையின் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்வரும் தலைப்புக்களை உள்ளடக்கும் மொடியூல்களைக் கொண்ட பொதுக்கூறொன்று தொழில்சார் பாடத்துறையில் காணப்படுகின்றது.

 அழகியல் செயற்பாடுகள் மூலம் இலக்கிய நயம், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பத் (ICT) திறன்கள், குடியுரிமைக்குரிய திறன்கள், சுகாதார மற்றும் வாழ்க்கைத் திறன்கள், சமூக நலன்காக்கும் திறன்கள், முயற்சியாண்மைத் திறன்கள். 

தரம் 12 இன் முதல் இரண்டு தவணைகளிலும் பரம்பியிருக்க கூடிய வகையில் 360 மணித்தியால (540 பாடவேளைகளுக்குச் சமனான) இடைத் தொழிற்பாட்டுக் காலத்தில் இக்கூறுவழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது

தொழில்பிரிவிற்கு O/L பரீட்சை பெறுபேறுகள் கவனத்திற்கொள்ளப்படமாட்டாது. ஒவ்வொரு வருடத்திலும் 03 தவணைகள் 02 வருடத்தில் 06 தவணைகள், 1ம் வருடத்தில் 1ம் தவணையில் ஆரம்ப அறிமுகப்பாடங்களாக 09 பாடங்கள் நடைபெறும் தொழில் பிரிவு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், தொழில்வழிகாட்டல்,சிங்களம், உளவியல்,ICT,தொழில்நுட்பம் போன்றவற்றை கட்டாயம் எடுத்தல் வேண்டும் 2ம் 3ம் தவணைகளில் 26 பாடங்களில் QS,Web design.ICT, பொறியியல்,மின்னியல்,பிளம்பிங், பெண் அலங்காரம், Hotel management முதலியவற்றில் 03 பாடங்களினை கட்டாயமாக எடுத்தல் வேண்டும். 2ம் வருடத்தில் 1ம் வருடத்தில் 2ம்,3ம் தவணைகளில் எடுத்த ஏதாவது ஒரு பாடத்தினை 2ம் வருடம் முழுவதுமாக கற்று பல்கலைக்கழகம் செல்ல முடியும். 

தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ரீதியான பல்கலைக்கழகமொன்று றத்மனாலையில் தொழிற்பிரிவு பல்கலைக்கழகமாக தொழிற்பட்டுவருகின்றது. அந்தவகையில் இலங்கையில் 40 க்கு மேற்பட்ட பாடசாலைகளில் தொழில்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்பாடத்துறை முன்னோடித் திட்டமொன்றாகச் செயற்படுவதோடு மாணவர்கள் தெரிவு செய்யக்கூடிய 26 தொழில்சார் திறன் பரப்புக்கள் இருக்கின்றன. தொழில்சார் பாடத்துறை நிகழ்ச்சித் திட்டத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு, கலைத்திட்டம, கணிப்பீட்டு முறை என்பவற்றின் இயல்பு காரணமாக, GCE உயர் தரத் தகைமையை வழங்குவதற்கான விவரக்கூற்றுக்களுக்கு இயைபானதாக இது காணப்படவில்லை. தேசிய தொழில்சார் தகைமைச் (NVQ) சட்டகம் மற்றும் இலங்கை தகைமைகள் சட்டகம் (SLQF) என்பவற்றின் வழிகாட்டல் குறிப்புக்களுக்கு ஏற்றவகையில் தொழில்சார் பாடத்துறை நிகழ்ச்சித் திட்டத்திற்குப் பொருத்தமான தகைமைப் பெயரொன்று வடிவமைக்கப்பட வேண்டும் HNDA, SIMA,WIRIG முதலியன காணப்படுகின்றன.

இவற்றின் மூலமாக உயர் கல்வியின் வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கும் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கும் பொருட்டு நாட்டிலுள்ள சிறந்த கல்வியினுடைய திறமையான மனித வளங்களை உருவாக்குவதற்கும் உயர் கல்வியானது அவசியமாகின்றது. 

தனியார் துறையில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இவ் உயர் கல்வி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக காணப்படுகின்றது. கல்வி பொதுவாக தேசத்தினுடைய வளர்ச்சியை ஆதரிக்கின்ற ஓர் விளக்காகும். உயர் கல்வியைப் பெற்ற நாடுகளே தமது தேசத்தினை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்கும் காரணியாகின்றது. 

திறந்த பல்கலைக்கழகத்தில் முழுநேர அல்லது பகுதிநேர தொழில்முறை கல்வியினை பயிலக்கூடியவர்களும் இதில் இணைந்து கற்றலினை மேற்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

 உயர்நிலைப்பாடசாலைகளில் கல்வியினை தொடரமுடியாதோர், பல்கலைக்கழக அனுமதியினை தவறவிட்டோர்கள் இங்கு கற்கைநெறியில் அதிகளவு மருத்துவம், விவசாயம், சமூகசேவை, பொறியியல் பயிற்சி, தொலைத்தொடர்பு சாதனப்பயிற்சி, இலத்திரனியல் பயிற்சி ஆசிரியப்பயிற்சி, கூட்டுறவு, கிராமநகர அபிவிருத்தி, சுற்றலாத்துறை என அனைத்துக்கற்கை நெறிகளும் வழங்கப்படுகின்றன.

 மாணவர்களின் தேவைக்கு ஏற்ப இவை கற்பிக்கப்படுகின்றன. TVET (Technical and Vocational Education and Training) இலங்கையில் கல்விமுறை மற்றும் தொழிலாளர் சந்தையில் தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு மாணவர்கள் தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பதனை முதன்மை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் அபிவிருத்தியமைச்சு (MYASD) இலங்கையின் வுஏநுவு அமைப்பின் பிரதான வடிவமைப்புக்களில் பங்கு வகிக்கின்றது. இது 16 சட்டங்களின்படி உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து மட்டங்களிலும் திட்டமிடல் ஒருங்கிணைப்பு என்பன 3ம் நிலைக்கல்வியின் தொழிற்கல்வியில் பொறுப்பாகக்கொண்டு செயற்படுகின்றது. வுஏநுவு அமைப்பானது ஆசிரியர்களுக்கான தொழில்நுட்பம் உள்ளிட்ட 12 டிப்ளோமா படிப்புக்களை வழங்கும் தொழிற்றுறை பல்கலைக்கழகமாகவும் செயற்படுகின்றது. , வுஏநுவு பயிற்சியாளர்களுக்கும் மதிப்பீட்டாளர்களுக்கும் குறுகிய காலப்பயிற்சிவகுப்புக்கள், பாடத்திட்டம், கற்கைக்கான கற்கைநெறியினை நடாத்துகின்றது. வளங்கள் அனைத்தினையும் கருத்திற்கொண்டு (VTA ) யினால் வாழ்க்கைக்கு ஆற்றல் ஆற்றலுக்கு தொழில் எனும் கருப்பொருளினை கொண்டு பயிலுனர்களை இணைத்துக்கொள்கின்றது. இலங்கையின் தொழிற்பயிற்சி அதிகார சபை நேரடியாக இதில் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. TVET துறையில் NVQ படிப்புக்கள் புதிய துறைகளுடன் இணைந்து செயல்படுகின்றன. 

NVQ நிலைகளான 5-6 தேசிய டிப்ளோமா (HND) தொழில்நுட்பக்கல்லூரிகளில் பெறலாம். (Higher National diploma) 09 மாகாணங்களிலுள்ள உயர் தேசிய டிப்ளோமாக்களை உள்ளடக்கிய கல்லூரிகளில் பெறமுடியும், அந்தவகையில் NVQ Level 7 பல்கலைக்கழகத்தில் பெறமுடியும்.

கல்வித் திட்டமானது முழுமையாக பாடத்திட்ட அறிவைக் கொண்டதாகவே காணப்பட உயர்கல்வி செயற்பாட்டைப் பெற்றுக்கொள்வதில் முக்கியத்துவம் பெறுகின்றது. எழுதவும் வாசிக்கவும் இயலுமாய் உள்ள ஓர் எழுத்தறிவு வீதம் கொண்ட நாடாக மாற்றுதல் மூட நம்பிக்கை வீட்டு வன்முறை மோசமான உடல் நலம் மற்றும் ஏழைகளின் வாழ்க்கைத் தரங்கள் போன்ற பிரச்சினைகளைத் தடுப்பதிலும் உயர் கல்வி படித்தவர் தூய்மை மற்றும் சுகாதாரம் பற்றிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டு சிறந்த சமுதாயத்தை உருவாக்க உயர் கல்வியானது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. 

இலங்கையினுடைய உயர்கல்வித் தரமானது பல வழிகளிலும் மேம்படுத்தப்பட்ட அமைப்பு முறைகளைக் கொண்டதாக காணப்படுகின்றபோதும் சில சிக்கல் தன்மைகளை சம காலத்தில் கொண்டுள்ளமையையும் கவனிக்கத்தக்கதாகவே இருக்கின்றது.

 அந்த வகையினில் மூன்றாம் நிலைக் கல்வியினுடைய குறைபாடான அம்சங்களாக உயர் கல்வி பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் குறைவானதாகக் காணப்படல் மாணவர்களினுடைய முழுக்கவனமும் பரீட்சையினையே மையமாகக் கொண்டிருத்தல் ஆங்கில மொழிப் புலமை இழக்கப்படுகின்ற தன்மை உருவாகுதல் மொழி பெயர்ப்பு பிரச்சினைகள் உருவாகுதல் உள்நாட்டுப் பொருளாதாரம் பாதிக்கப்படல் உலகலாவிய ரீதியில் இலங்கையில் காணப்படுகின்றதான பல்கலைக்கழகங்கள் பின்னடைவு கண்டவைகளாக இருத்தல் இலங்கையினுடைய கலைத்திட்ட அமைப்பானது பொருத்தமற்ற முறையினதாக அமைந்திருத்தல் போன்ற பல காரணங்ளைக் குறிப்பிட முடியும்.

மேற்குறிப்பிட்டவற்றை நோக்கும் போது உயர் கல்வியினை வழங்குகின்ற ஆசிரியர்கள் கடந்த காலத்தோடு நின்று விடாமல் எதிர்காலத்திற்கும் ஏற்றவர்களாக பயணிக்கின்ற போது இத்தகைய குறையாடுகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். வளப்பற்றாக்குறை முகாமைத்துவமின்மை போன்ற சூழ்நிலைமைகளினால் உயர் கல்வியினை தொடர முடியாமல் போகின்ற பட்சத்தில் போதிய வளங்களை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.


மோ.தர்சிகா

2ம் வருடம் 1ம் அரையாண்டு

கல்வியியல் சிறப்பு கற்கை மாணவி

கல்விஇ பிள்ளைநலத் துறை

கலை கலாசாரப்பீடம்

கிழக்கு பல்கலைக்கழகம்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.