இன்று உலக-சிறுவர் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஒக் டோபர் மாதம் முதலாம் திகதி உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறானதொரு தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான காரணம் சிறுவர்களுக்கெதிராக அரங்கேற்றப்படுகின்ற துஷ்பிர யோகங்ளையும் அநீதிகளையும் இயன்றளவு குறைத்து அவர்களுக்கான சகலவிதமான உரிமைகளையும் பெற்றுக் கொடுப்பதேயாகும். 

இன்றையஉலகம் எதிர் நோக்கும் மிக முக்கிய சமூகப் பிரச்சினைகளுள் ஒன் றாக சிறுவர் மீதான துஷ்பிர யோகம்  விளங்குகின்றது. 

சிறுவர்துஷ்பிரயோகம்  என்ற விடயமானது வளர்ச்சி அடைந்த மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் என்ற எந்தவித வேறுபாடுகளுமின்றி உலகம்முழுவதும் காணப்படும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாக இருந்தாலும் கூட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் அது ஒரு பாரியபிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. 

 சிறுவர்கள் என்போர் மனித சமூகத்தின் மிக முக்கிய பகுதியினராகக் கருதப் படுகின்றனர். அத்தோடுஅவர்கள் அடுத்தவர்களில் தங்கிவாழ்கின்ற பலவீனர்களாகக் காணப் படுவதனாலேயே அவர்களது உரிமைகள் அதிகம் மீறப்படுகின்றன.

இவ்வாறான உரிமைமீறல்கள், துஷ்பிரயோகங்களில் இருந்தும் சிறுவர் களைப் பாதுகாப்பதகாகப் பல கொள்கைகள் மற்றும் பிரகடனங்கள்காலத்துக் குக் காலம் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அவற்றிடையே 1989 இல் ஐ.நா. சபையில் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமைகளைப் பற்றியகொள்கையானது சிறுவர்களைப் பாதுகாத்தல் தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவு ஏற்பாடுகளை கொண் டுள்ளது.

மேலும் ஐ.நா சபையானது 18வயதுக்குட்பட்ட  அனைவரையும் சிறுவர்கள் என வரையறுத் துள்ளது. சிறுவர்கள் எதிர்கால உலகின் அத்திவாரம் என்ற வகையில் அவர்களது எதிர்காலத்தைச் சிறப்பாக்கத் திட்டமிட்டு வழிநடத்த வேண்டும்.

ஆனால் இன் றைய மனித சமுதாயமானது நாகரிகத்தின் விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதேவளை சிறுவர்களுக்கெதிராக மேற் கொள்ளப்படும் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துக் கொண்டேசெல்கின்றன.சிறுவர் துஷ்பிரயோகத் தின் பல்வேறு வடிவங்கள்

👉உடலியல் ரீதியான துஷ்பிரயோகம்.

👉உளவியல் ரீதியான துஷ்பிரயோகம்.

👉பாலியல்ரீதியான துஷ்பிரயோகம்.

👉உணர்வு ரீதியான துஷ்பிரயோகம்.

👉புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகம்.

 குறிப்பாக உலகில் உள்ள அனைத்துசிறுவர்களும் இவற்றுள்  ஏதாவதொரு துஷ்பிரயோகத்திற்கு முகம் கொடுத்தேவருகின்றனர் என்பதனை ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

சிறுவர்களைப் பாதுகாப்பதற் கான பல ஏற்பாடுகள் இன்றைய நவீன உலகில் காணப்பட்டாலும் கூட அவற்றையும் மீறி சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப் பட்டு வருகின்றனர். மேற்படி சிறுவர்  துஷ்பிரயோக வடிவங்களை நீக்குவதற்காக உலகின் பல அரசுகள், அரச சார்பற்றநிறுவனங்கள், சமூக மற்றும் சமய நிறுவனங்கள் போன்ற வற்றால் பல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. 

மேற்படி அனைத்து நிறுவனங்களினதும்சேவைகளை ஒருங்கிணைத்து நடை முறைப்படுத்துவது அத்தியவசியமாகும். இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு உலக சிறுவர்தினத்தை சிறப்பாக திட்டமிட்டுப் பயன்படுத்தலாம். 

மேலும் சிறுவர் தினம்  சம்பந்தமாக குறிப்பிட்ட தினத்தில் மாத்திரம் மும்முரமாக செயற்படுவதில் எந்தப் பயனும் இல்லை. 

வருடத்தில் ஏனைய நாட்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் அனைத்து தரப்பினரதும் கவனத்திற்கு உட்பட வேண்டியதுஅவசியமாகும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.