உடல் எடையை குறைக்க கிரீன் டீ. இவ்வளவு நல்லதா?

உடல் எடை அதிகரிப்பு குறித்த கவலை அனைவரிடமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக 30 வயதை கடந்த பெண்கள் பலருக்கும் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது.

உடல் எடையை குறைக்க எப்படி அனைவரும் வாக்கிங், ஜாக்கிங், யோகா போன்றவற்றை செய்யலாமோ அப்படித்தான் கிரீன் டீ குடிப்பது.

கிரீன் டீ உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க, தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

கிரீன் டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும், அதை குடிப்பதற்கான சரியான நேரம் குறித்தும் தற்போது பார்க்கலாம். 

📌கிடைக்கும் நன்மைகள்

கிரீன் டீயில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.

அதே போல் கிரீன் டீ தொப்பை கொழுப்பை குறைக்கவும் கைக்கொடுக்கிறது.

கிரீன் டீயில் மிகக் குறைந்த அளவு காஃபின் உள்ளது. கிரீன் டீயில் கேடசின் எனப்படும் பாலிபினால் வகை உள்ளது.இந்த கேடசின்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும், இவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

 கிரீன் டீயில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் காஃபின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. 

📌எப்போது குடிக்கலாம்?

எடை இழப்புக்கு கிரீன் டீ  காலை உணவு எடுத்து கொண்டு 1 மணி நேர கழித்து கிரீன் குடிக்கவும்.

அதே போல் மதிய உணவுக்கு 2 மணி நேரம் கழித்து கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.ஒரு நாளைக்கு 3-4 கப் கிரீன் டீ குடிக்கலாம்.

வெறும் வயிற்றிலும் கிரீன் டீயை அருந்தலாம். சாப்பிட்டு 10-15 நிமிடங்களுக்குப் பிறகு கிரீன் டீ குடித்தால், அது உணவை ஜீரணிக்க உதவும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.