Menstrual Disc மாதவிடாய் காலத்தில் சிறந்ததா? இதனை பயன்படுத்துவது எப்படி?

Sanitary pad மற்றும் Tampon களை விட சிறந்தது இந்த Menstrual Disc என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அக்காலத்தில் மாதவிடாயின் போது துணிகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது Sanitary pads, Tampons, Menstrual cups போன்றவற்றை தொடர்ந்து அதில் Menstrual Disc சேர்ந்துள்ளது.

Menstrual Disc மற்றதை விட அதிக அளவு உதிரப்போக்கை தாங்குவதால், இது சிறந்தது என்று கூறப்படுகிறது.

Tampons மற்றும் Sanitary pads மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை உறிஞ்சும் தன்மை கொண்டது. ஆனால் Menstrual Disc அவற்றை சேகரிக்கும் தன்மை கொண்டது.

இது மருத்துவ உபயோகத்துக்கான சிலிக்கான்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது.

📌எப்படி பயன்படுத்துவது?

கைகளை சுத்தம் செய்த பின்னர் Menstrual Discஐ அரையாக மடித்துக்கொள்ள வேண்டும். உங்கள் உறுப்பில் மடித்த Discஐ உள்ளே வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்புறக் கீழ் பகுதியை நோக்கி கருப்பை வாயை அது அடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதை உள்ளே வைத்தவுடன், எந்த லீக்குகளும் ஆகாத வண்ணம் சரியாக பொருத்த வேண்டும்.

உங்களின் உதிரப்போக்கு அளவுக்கு ஏற்ப நீங்கள் இதை அணிந்துகொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரம், கழித்து அதை நீங்கள் மாற்ற வேண்டும்.

Menstrual Discன் அடிப்பாகத்தில் சிறிய தடிப்பான அமைப்பு இருக்கும். கைகளை சுத்தம் செய்த பின்னர் அந்த தடித்த பகுதியை பிடித்து மெதுவாக எடுக்க வேண்டும்.

சேகரிக்கப்பட்ட மாதவிடாய் உதிரத்தை கழிவறையில் கொட்டிவிடவேண்டும். நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு மீண்டும் பயன்படுத்த வேண்டும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.