கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மத்திய நிலையத்தால் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நாளை (23) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தென்மேற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு வளைகுடா பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி வங்கதேச கடற்கரையை (இலங்கையை விட்டு) நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய கடல்கள் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும், மேலும் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

எனவே இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாளை காலை வரை பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை ஏற்படுவதற்கு சாதகமான வளிமண்டல நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.