இலங்கையில் ஆரம்ப நிலை கல்வியில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்க்கபடுகின்ற மாற்றங்கள்.

 

’இளமையின் கல்வி சிலையில் எழுத்து” எனும் பழமொழிக்கு இணங்க ஒவ்வொரு பிள்ளையும் தமது சிறு வயதிலேயே அதாவது ஆரம்ப கல்வி பருவத்திலேயே கல்வியை சரியான முறையில் கற்றுத் தேர வேண்டும். ஆரம்ப கல்வி உலகளாவிய ரீதியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமான கல்வி விருத்தியின் அடித்தளம் ஆரம்ப கல்வியே ஆகும்.

 இலங்கையை பொறுத்தவரையில் முறை சார்ந்த கல்வியின் முதல் கட்டமாக அமைவது ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையுள்ள வகுப்புகளாகும்.

 நிறுவன அமைப்பிற்கு உட்பட்டு முறையான கல்வி பயில தொடங்கும் நிலை ஆரம்ப கல்வி பருவமாகும்.இங்கு சராசரியாக 5 ஆண்டுகள் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.கற்றலுக்கு வாசிப்பு,எழுத்து,எண், கணிதம் என்பன அடிப்படையாக அமைகின்றது. இவற்றோடு சமூக அறிவு, சுகாதார அறிவு,சூழல் அறிவு, உடற்கல்வி செயற்பாடுகள் போன்ற பாடங்களும் மாணவர்களின் கற்றல் அனுபவத்திற்கு அவசியமாக அமைகின்றது.

அந்த வகையில் இவ்வாறான முதலாம் நிலை கல்வி  அபிவிருத்தி  மூன்று நிலைகளில் அமைந்துள்ளது. இவ்வாறு கல்வி வழங்கப்பட்ட போதிலும் அதில் பல பிரச்சினைகள் தோன்றுவதையும் நாம் அவதானிக்க முடிகின்றது.  

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் சில பாடசாலைகள் தங்கள் பெயரை தக்கவைத்துக் கொள்ளவும், பெற்றோர்கள் தங்கள் கௌரவத்திற்காகவும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் ஆரம்ப நிலை சார் மாணவர்களின் கற்றல் பாதிப்படைகின்றது.  கற்றலுக்காக கற்றல் என்பது இங்கு பாதிப்படைகின்றது.

ஒரு சில பாடசாலைகளில் கிராமப்புற பாடசாலைகளில் வாண்மைத்துவமிக்க ஆசிரியர்கள் இன்மையால் ஆரம்ப பிரிவு  மாணவர்களின் அறிவு விருத்தியானது பாதிப்படைகின்றது. 

 சில பாடசாலைகளில் கற்றல் சார்பான பற்றாக்குறை காணப்படுகின்றது.  இதனால் போதிய அளவு திறமை மாணவர்களிடம் காணப்பட்ட அவர்களிடம் வளப்பற்றாக் குறையினால் அவர்களின் ஆளுமை விருத்தியானது பாதிப்படைகின்றது. 

இன்றைய காலகட்டத்தில் சில பாடசாலைகளில் ஒரு வகுப்பறைக்கான மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது. இதனால் பல பிரச்சினைகள் எழுகின்றன .அதாவது இதனால் மெல்ல கற்கும் பிள்ளைகளுக்கு அவதானிக்க முடியாமல் மேலும் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாய் அமைகின்றது .

 தரம் ஒன்று தரம் இரண்டு மாணவர்களுக்கு இன்று விளையாட்டுடனான கல்விக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருக்கின்றனர். விளையாட்டுக்களில் ஈடுபடும்போது மாணவர்களுக்கு மகிழ்வான ஒரு சூழலை அது ஏற்படுத்தும். இது அனுபவிரீதியான கற்றலுக்கு வழிவகுக்கும் இவ்வாறான செயற்பாடுகள் செயல்படுத்த படாத போது மாணவர்கள் மகிழ்ச்சியை இழக்கின்றனர். இதனால் மாணவர்களின் இடைவிலகல்களுக்கு பாடசாலை சூழலே வழிவகுகின்றது.

மேலும் தரம் ஐந்து புலமை பரிசிலானது பொருள் வசதி குறைந்த வறுமை நிலையில் காணப்படும் குடும்பங்களின் ஆற்றலுடைய மாணவர்களுக்கு உதவி சம்பளம் வழங்குதல், மதிப்புமிக்க பாடசாலைகளின் இடைநிலை கல்விக்கு மாணவர்களை தெரிதல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்படுகின்றனது. 

ஆனால் இது தற்பொழுது பெற்றோர்களின் கௌரவ பரீட்சையாகவும் மாறுவதையும் இதற்காக பிள்ளைகளின் மீது அளவு கடந்த அழுத்தங்களை பிரயோகிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நடவடிக்கையால் பிள்ளையின் இயல்பான நடத்தை ஒடுக்கப்பட்டு ஆரம்ப கல்வி பருவமே அர்த்தமற்றதாகி விடுகின்றது .

மேலும் சில பெற்றோர்களின் அக்கறையின்மையினால் ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுகின்றது அவர்களின் குடும்ப சூழலில் செல்வாக்கு சில பெற்றோர்கள் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குவதால் அவர்களின் கல்வி பாதிப்படைகின்றது.

 எண்ணெழுத்து, வாசிப்பு என்பவற்றை கற்பிப்பதை ஆசிரியரின் கடமை என பெற்றோர்கள் கருதுவதால் பிள்ளையின் முழுமையான விருத்தியில் முன்னேற்றுதல் அதன் முழுமையான தொழில்பாடு என்பதை மறந்து பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு  அழுத்தத்தை கொடுக்கின்றனர். மேலும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடையே நெருங்கிய தொடர்பு இன்மையால் பெற்றோர்கள் ஆசிரியர்களை வாரத்துக்கு ஒரு முறையாவது சந்திக்கின்றனரா! பிள்ளையின் ஆளுமை விருத்தி பற்றிய பங்களிப்பை பெற்றோர்கள் வழங்குகின்றார்களா! என்பது இன்றைய காலகட்டத்தில் கேள்விக்குறியாகவே உள்ளது .இதனால் பிள்ளையின் செயற்பாடுகள் பற்றி பெற்றோர்களுக்கு தெரிவதில்லை இது இன்றைய காலகட்டத்தில் ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.

 மூன்று வயதில் முன் பாடசாலைக்கு சேரும் குழந்தை நான்கு, ஐந்து வயதிலும் அதே பாடத்திட்டத்தையே கற்கின்றது. இதனால் முறைசார் பாடசாலைக்குள் நுழையும் போது அக்குழந்தை ஒரு சலிப்புத் தன்மையுடனே நுழைகின்றது. இது அக்குழந்தையின் வினையாற்றலை பாதிப்பதுடன் தரம் ஒன்று ஆசிரியருக்கும் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கின்றது.

ஆரம்ப வகுப்புகளில் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடம் முழுவதுமாக சூழல் சார்ந்த செயற்பாடாகவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று பாடத்தை கற்பிக்கும் போது ஆசிரியர் மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் செல்வதில்லை வகுப்பறைக்குள் வைத்து அதனை ஒரு வாசிப்பு பாடமாகவும்,எழுத்து பாடமாகவுமே நடத்திச் செல்வதை பெருமளவு அவதானிக்க முடிகின்றது. 

 இன்று ஆரம்ப வகுப்பு மாணவர்களை தனித்தனியே கவனப்படுத்துதல் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் ஒரு மாணவனின் பலம், பலவீனம் என்பன ஆசிரியருக்கு தெரியப்படுவதில்லை இதனால் அவனது கற்றல் தடைப்படுவதையும் கற்றலில் பிரச்சினைகள் ஏற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

 பிள்ளைகள் சிறுவயதிலேயே பிள்ளைகள் புலன் இயக்க செயற்பாடுகளின் ஊடாக சுற்றாடலை ஆய்வு செய்கின்றனர். ஆனால் இன்றைய பாடசாலைகளில்  சுற்றாடலுடனும் இசைவாக்கமடைவதற்கான செயல்பாடுகளை பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை இதனால் முறைசார் பாடசாலைகளில் ஏற்படும்  சவால்களுக்கு மாணவர்கள் முகம் கொடுப்பதற்கான தடை ஏற்படுகின்றது.

 தொகுத்து நோக்குகின்ற பொழுது ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கல்வி செயல்பாடுகளில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதிகளவில் செல்வாக்கு செலுத்துவதை அவதானிக்க முடிகின்றது பிள்ளையின் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் ஆசிரியரும் மாணவர்களும் செயல்பட வேண்டும். ஆரம்ப வகுப்பு மாணவர்கள் கற்றல் தொடர்பான சில பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.இதனை தீர்ப்பதற்கு ஆரம்பக் கல்வியில் பல மாற்றங்களினை கொண்டு வருதல் வேண்டும்.

 ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு வாண்மை மிக்க ஆசிரியர்களின் நியமித்தல் வேண்டும். வாண்மை மிக்க ஆசிரியர்கள்  மூலமே எதிர்கால தலைவர்களை உருவாக்க முடியும்.இதன் மூலம் ஒரு சிறந்த மாணவர் சமுதாயத்தை உருவாக்க முடியும்.

 ஆரம்ப வகுப்புகளில் ஒவ்வொரு மாணவரும் தனித்தனியே கவனிக்கப்படுதல் வேண்டும்.அவனது பலம் மற்றும்  பலவீனம், தனியாள் வேறுபாடுகள் ஆசிரியரால் கண்டறியப்படுவதுடன் அது தொடர்பில் பெற்றோருக்கும் அறிவூட்டப்படுதல் வேண்டும்.

 ஆரம்ப வகுப்பு கலைத்திட்டங்களை தயாரிக்கும் போது பாட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சுய சிந்தனை, குறியீடுகளை அடிப்படையாகக் கொண்ட கற்றல், சிந்தனை வெளிப்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். கலைத்திட்டத்தை உருவாக்குபவர்கள் நடைமுறைக்கு தேவையான நடைமுறை விடயங்களையும் உள்ளீர்க்கப்படுதல் வேண்டும். கணிப்பீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

 கருப்பொருட்களை கற்பிக்கும் போது நிகழ்கால அனுபவங்களை பெறக்கூடிய வகையில் கற்பித்தல் வேண்டும் .

உதாரணமாக =சுற்றாடல் சார்ந்த செயல்பாடுகள் பாடத்தில்” நாம் இலங்கையர்" என்ற கருப்பொருளை சுதந்திர தினம் போன்ற தினங்கள் வரும்போது நடைமுறைப்படுத்தும் வகையில் கற்பிக்கும் போது பிள்ளை அது தொடர்பான நேரடி அனுபவத்தை கற்றுக் கொள்ள முடியும்.

உலகில் சிறந்த கல்விக் கொள்கைகளை பிரயோகிக்கும் நாடுகளில் உள்ள கல்விக் கொள்கைகளை பிரயோகித்தல் வேண்டும்.

 உதாரணமாக = உலகில் தலைசிறந்த கல்வியை போதிக்கும் பின்லாந்தில் 7 வயதில் பாடசாலை சேரும் பிள்ளை முதல் மூன்று ஆண்டுகளும் சிறிது நேர கற்றலிலும் ஏனைய நேரங்கள் ஜிம்,விளையாட்டு போன்றவற்றிலேயே கழிக்கின்றது இதன் போது எந்த தேர்வு எதிர்கொள்ளாத பிள்ளையின் உலக அளவில் உலக அளவில் நடைபெறும் தேர்வுகளில் முதலாவது இடத்தில் தக்க வைத்துக் கொள்கின்றனர்.இலங்கையர் நாம் சிந்திக்கவேண்டிய ஒரு விடயமாகும்.

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பரீட்சை இலக்காகக் கொண்ட கல்வியை கைவிட்டு நடைமுறை விடையங்களை நேரடியாக கொண்டு காண்பித்து கல்வி பயிற்றுதல் வேண்டும்.

ஆசிரியர் பெற்றோர்களிடத்தில் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்,எண்ணெழுத்து வாசிப்புக்கு பதிலாக விளையாட்டுக்கு முழுமையான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்,ஆரம்ப கல்வி மாணவர்களுக்கு பெற்றோர்கள் பிள்ளைகளின் இயற்கையான செயற்பாடுகளுக்கு இடமளித்து இயல்பாகவே அவர்கள் வளர்வதற்கு இடம் அளித்தல் வேண்டும், ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கிய ஆசிரியர் பற்றாக்குறையின் நிவர்த்தி செய்தல் வேண்டும்,அனுபவக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும்.

 உதாரணமாக =பின்லாந்து நாட்டை எடுத்துக் கொண்டால் ஒரு பாடம் தொடர்பான அறிவை வாய் வழியாக வழங்கி மூன்று மணித்தியாலங்கள் நேரடி காட்சிக்கு உட்படுத்தி மாணவர்களுக்கு கற்பித்தல் விடயம் தொடர்பான முழு தெளிவு வழங்குமுறை காணப்படுகின்றது இதன் மூலம் பின்லாந்து நாட்டின் மாணவர்கள் ஆக்கத்திறனும் ஆளுமை திறனும் கொண்டவர்களாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

 மேற்கூறப்பட்ட விடயங்களை எடுத்து நோக்கும் போது ஆரம்பக் கல்வியின் அத்திவாரம் முறையில் இடப்பட்டால் மாத்திரமே பிள்ளையின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுத்திட முடியும் என்பதற்கினங்க பிள்ளையின் உடல், உள வயதிற்கு ஏற்றார் போல் ஆரம்ப கல்வி வழங்கப்படுதல் வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ளல் வேண்டும்.

நவரத்தினராஜா துர்க்காதேவி 

2ம் வருடம் முதலாம் அரையாண்டு

கல்வியியல் சிறப்புகற்கை மாணவி

கல்விமற்றும் பிள்ளைநலத்துறை

கலை கலாசாரபீடம்

கிழக்குபல்கலைக்கழகம்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.