சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்துவது நல்லதா?

வேர்க்கடலையை பச்சையாகவே வேகவைத்தோ சாப்பிடுகிறோம். ஆனால் கடலை எண்ணெய் பயன்படுத்த பயப்படுகிறோம்.

அதிலும் குறிப்பாக இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் இருப்பவர்கள் கடலை எண்ணெயை தொடுவதே இல்லை.

ரீஃபைண்ட் செய்யப்படாத கடலை எண்ணெய் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் பல பலன்களைப் பெற முடியும்.

✅வேர்க்கடலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், மொத்த கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு, சோடியம் , பொட்டாசியம், வைட்டமின் பி1 , வைட்டமின் பி2 , நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட்,கால்சியம் , இரும்பு ,மக்னீசியம் ,பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

✅கிடைக்கும் நன்மைகள்

ஆயுர்வேதத்தில் பல நூற்றாண்டுகளாக பித்தம் மற்றும் கப தோஷங்களை உடலில் சமநிலைப்படுத்த வேர்க்கடலை உணவில் சேர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் குறைந்த கிளைசெமிக் கொண்ட உணவான இந்த வேர்க்கடலையை எடுத்துக்கொள்ளலாம்.

வேர்க்கடலை சாப்பிடுவதால் சருமம், தலைமுடி, நினைவாற்றல் மேம்படுத்துவது, நீரிழிவு நோய், எடை இழப்பு ஆகியவற்றுக்கு உதவி செய்யும்.

பசியின்மையைக் கட்டுப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க வறுத்த வேர்க்கடலையை சாப்பிடலாம்.

வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும். குறிப்பாக கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய்களின் ஆபத்தைக் குறைக்கச் செய்யும்.

வேர்க்கடலையை வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிட்டால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 58% குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

நிலக்கடலையில் வைட்டமின் பி3 மற்றும் நியாசின் ஆகியவை அதிக அளவில் இருப்பதால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதனை சாப்பிடுவதால் வயதாகும்போது உண்டாகிற அல்சைமர், பார்கின்சன் மற்றும் டிமென்ஷியா ஆகியவற்றின் தாக்கத்தைக் குறைக்க முடியும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.