மாதவிடாய் நேரத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுதா? இது தான் நிரந்தர தீர்வு

பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் என்பது மாதம் மாதம் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். இந்த சூழ்நிலையில் ஒரு சில பெண்களுக்கு இரத்தப்போக்கானது அதிகமாக ஏற்படும். இந்த அதீத ரத்தப்போக்கானது பல்வேறு உடல்நல பிரச்னைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

மாதவிடாயின்போது அதீத ரத்தப்போக்கு என்றால் என்ன? அதன் அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.  

✅அதீத ரத்தப்போக்கு

அதிகமான ரத்தப்போக்கு பிரச்சினையை மெனரேஜியா என்று அழைப்பார்கள்.

ரத்தம் கட்டி கட்டியாக வெளியேறுவது, ஒருநாளைக்கு 2-3 நாப்கின்கள் முழுவதும் நனைந்து வெளியேற்றுவது என நடைமுறையாக இருந்தால் அது அதீத ரத்தப்போக்கிற்கான காரணமாகும்.  

ரத்தமானது கட்டிக்கட்டியாக வெளியேறுவது அதீத ரத்தப்போக்கு பிரச்சினைக்கு முதல் அறிகுறியாகும்.

திருமணமான பெண்களுக்கு 4-5 நாட்கள் ரத்தப்போக்கு ஏற்பட்டால் அது இயல்பானது. அதைத்தாண்டி மாதவிடாய் தொடர்கிறது என்றால், அதுவும் அதீத ரத்தப்போக்குதான்.  

✅இவ்வாறு ஏற்படக் காரணம் என்ன?

கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் இந்த பிரச்சினையானது எற்படும். இந்த கட்டிகள் கர்ப்பப்பையின் உள்பகுதிக்குள் இருந்தால் அதன் சவ்வு பெரிதாகி அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும். 

வழக்கமாக 28 நாட்கள் மாதவிடாய் சுழற்சி என்பது பிசிஓடி பிரச்சினை உள்ள பெண்களுக்கு 40 நாட்களுக்கும் அதிகமாக இருக்கும். இதனால் இரண்டு மாதங்களுக்க சேர்த்து வைத்து உள்ளுக்குள் தடிமனாகி அதிகமான ரத்தப்போக்கு ஏற்படும்.

இளம்வயதில் இந்த பிரச்சினைக்கு பிசிஓடி உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகளும் 40 வயதுக்கு மேலானவர்களுக்கு ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாக அமைகின்றன. இவ்வாறு ஏற்படுவதால் பலருக்கு ரத்தச்சோகை பிரச்சினை ஏற்படும்.

அவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும். உடல் சோர்வு, போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

✅இதை தடுக்க என்ன செய்யலாம்?

இரும்பு சத்து நிறைந்த காய்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் என அவற்றை உட்க்கொள்ள வேண்டும். 

புரத சத்து நிறைந்த மீன்களையும் அதிகமாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்த பிரச்சிகை தீவிரமாகியது என்று தெரிந்தால் உடனே வைத்தியரை நாடி, அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.