மனதளவில் நான் இன்னும் குழந்தைதான்!

இந்த வார்த்தையை பலர் சொல்வதுண்டு. ஆனால், எதார்த்தம்?

நம் மூளை நாம் குழந்தைத்தனமாய் இருப்பதை ஒரு பொழுதும் அனுமதிக்காது.

நாம் குழந்தைத்தனமாய் நடந்துக் கொள்கிறோம் என்று சிந்திக்கும் அந்த ஒரு நொடியே கூட  நம் குழந்தைத்தனத்தை காலி செய்து விடும்.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் எழுதிய ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.

"பூப்பதை தவிர பூவிர்க்கு வேறு என்ன தெரியும்?

தன் பெயர் பூ என்பதாவது தெரியுமா?" என்று

அதுபோல்,

"குழந்தைத்தனத்தைத் தாண்டி

குழந்தைகளுக்கு வேறு என்ன தெரியும்?

தான் செய்வது குழந்தைத்தனம் என்றாவது தெரியுமா"?

என்று தான் கேட்கத் தோன்றுகிறது.

அதிகம் யோசிக்காமல், உண்டு, உறங்கி, விளையாடி, வெறும் அதீத விளையாட்டுக்களினால் மட்டுமே உடல் சோர்ந்து, தூங்க மனமில்லாமல் தூங்கச்  சென்று இதெல்லாம் குழந்தைகளுக்கு "மட்டுமே, மட்டுமே" சாத்தியம்.

அந்த வாழ்க்கைக்கு மனம் அதீதமாய் ஏங்குவதாலோ என்னவோ, மனதளவில் இன்னும் குழந்தைதான் என்ற வார்த்தை பலரால்  பரவலாக்கப்பட்டுவிட்டது.

யோசித்துப் பார்த்தால், சத்தம் போட்டு பார்க்கும் ஒரு கார்ட்டூனோ, ஒரு பாடலோ, பேட்டரி துணையோடு சத்தமிடும்/கீழே இறைந்துக் கிடக்கும்  பொம்மைகளோக் கூட "நீ ஒண்ணும் குழந்தை இல்லைப் போ" என்று சொல்லிவிடும். ஏனெனில், இந்த விஷயங்கள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் அப்படி.

ஆனால் உண்மையில், குழந்தைத்தனம் எந்த அளவிற்கு அழகோ அதற்கு சற்றும் குறைவில்லாமல்  வயதிற்கேற்ற அறிவும், தெளிவும், முதிர்ச்சியும், பக்குவமும் அத்தனை அழகு.

"கண்டவர் விண்டிலர்,

விண்டவர் கண்டிலர்"

என்பது போல், இதை உணர்ந்தவர்கள் தான் ஒரு குழந்தை என்று சொல்லிக்கொள்வதில்லை. சொல்பவர்கள், இதை இன்னும் உணர்ந்ததில்லை.

ஒரு நொடிப்பொழுதும் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் அந்த அந்த நொடியில் வாழ்வதெல்லாம் வரம். கிட்டத்தட்ட தியானம் போலத்தான். அது குழந்தைகளுக்கு மட்டுமே சாத்தியம். 

குழந்தைப் போல் வாழத்தான் ஆசை. சாத்தியம் இல்லை என்பதை அறிந்தே.

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.