வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களா நீங்கள்?

“வாழ்வில் இன்னும் ஏன் முன்னேறவில்லை?” என்று யாரேனும் கேட்டால், நம்மில் சிலர் “அதற்கு எனக்குச் சரியான வாய்ப்புக் கிடைக்கவில்லை” என்று கூறிவிடுவோம். “வாய்ப்பிற்காக ஏதாவது முயற்சி செய்தீர்களா?” என்று கேட்டால், “அதற்கான வாய்ப்பும் கிடைக்காததால் எதுவும் முயற்சி செய்யவில்லை” என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள். 

1. தொடர்ச்சியான கற்றல்

 உங்கள் கல்வி மற்றும் திறன்களில் முதலீடு செய்யுங்கள். நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒரு திறன் உங்களை வெளிப்படுத்தச் செய்யும். இதனால் திறன் சார்ந்த பல்வேறு வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதுமட்டுமின்றி நீங்கள் கற்றுக்கொள்ளும் திறன் சார்ந்த தொழிலில் அந்தத் தொழில்துறையின் போக்குகள் மற்றும் மேம்பாடுகள் பற்றியும் அவசியம் நன்கு தெரிந்துகொள்ளுங்கள்.

2. நெட்வொர்க்கிங்

புதிதாகப்  பல மனிதர்களுடன் பழக கற்றுக் கொள்ளுங்கள். பலருடன் பழகுவதன் மூலமாக  நமக்குப்  பல தொடர்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பல வாய்ப்புகள் கிடைக்கும். அதனால், வலுவான தொழில்முறை  நெட்வொர்க்கை  உருவாக்கிப் பராமரிக்கவும். 

இதற்காக, நீங்கள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளவும், நிறுவனங்களில் சேர்ந்தவுடன், உங்கள் துறையில் உள்ளவர்களுடன் இணையவும் தயங்காமல் இருப்பது அவசியம்.

3. தனிப்பட்ட பிராண்டிங்

வளர்ந்து வரும் காலங்களில் சமூக வலைத் தளங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதன் மூலமாகத்தான் நமக்கான வாய்ப்பையும் உருவாக்க முடியும். நீங்கள் அதில் கிடைக்கும் தகவல்களை பெரும் நுகர்வோர்களாக மட்டுமில்லாமல், நீங்களும் அதில் தகவல்களை உருவாக்கும் ஒரு கிரியேட்டராக மாற வேண்டும். 

உங்கள் நிபுணத்துவம் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்த, LinkedIn, இன்ஸ்டாகிராம், யூடியூப் , பேஸ்புக் போன்ற வலுவான ஆன்லைன் தளங்களில் உங்களைப் பற்றிய குறிப்புகளை ஏற்றுங்கள். இதனால் பல வாய்ப்புகள் கிடைக்கும்.

4. செயலில் இருங்கள்

உங்கள் இலக்குகளுடன் ஒத்துப்போகும்  வேலைகள், திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பதன் மூலம் வாய்ப்புகளைத் தேடுங்கள். அதுமட்டுமின்றி, தன்னார்வப் பணியின் மூலம் உங்கள் நேரத்தையும் திறமையையும் வழங்கும்போது புதிய வாய்ப்புகள் மற்றும் இணைப்பு களுக்கான கதவுகள் திறக்கும்.கருமை நிறம் கொண்ட உணவுகளில் இருக்கும் கணக்கில்லா நன்மைகள்!

5. நேர்மறை மற்றும் திறந்த மனதுடன் இருங்கள்

புதிய அனுபவங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள்.  பின்னடைவைச் சந்திக்கும்போதும் நேர்மறையாக இருங்கள். எளிதில் விட்டுவிடாதீர்கள். முயற்சியைத் தொடருங்கள் மற்றும் வாய்ப்புகளைத் தேடுவதில் விடாமுயற்சியுடன் இருங்கள்.சில நேரங்களில் எதிர்பாராத இடங்களிலிருந்தும்கூட வாய்ப்புகள் உருவாகும்.

6. இலக்குகளை அமைக்கவும்

உங்கள் இலக்குகளை வரையறுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்துங்கள். இது உங்கள் முயற்சிகளைக் குறிப்பிட்ட வாய்ப்புகளில் கவனம் செலுத்த உதவும்.

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு நம்மைத் தேடி வராது.  நியமனங்களைச் செய்யாது. அது வரும்போது நாம்தான் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்புகள் பல வடிவங்களில் வரலாம். எனவே,தயாராக இருப்பது மற்றும் திறந்த மனதுடன் இருப்பது முக்கியம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.