ஆச்சிரியப்பட வைக்கும் முருங்கையின் மருத்துவக்குணங்கள்.

முருங்கையில் விட்டமின் A,B,C ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்துக்களும் ஏராளமாய் உள்ளன.

இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளையும் வலுவூட்டுவதுடன் பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இவ் முருங்கைக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம்.

✅முருங்கைக்கீரையின் நன்மைகள்

சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் விரைவில் குணமாகும். மனித உடலில் வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது.

✅மலச்சிக்கலை தடுக்கும்

உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க இது உதவும். மலச்சிக்கலையும் போக்கக் கூடியது. வயிற்றில் வேண்டாத புழு, பூச்சிகள் இருந்தாலும் அதை மலத்துடன் வெளியேற்றும் சக்தி இந்தக் கீரைக்கு உண்டு.

இரத்தத்தில் அளவுக்கதிகமாக கொழுப்புச் சத்து சேருவது மிகவும் ஆபத்தானது. இவ் முருங்கைக் கீரை இரத்தத்திலுள்ள கொழுப்பை குறைக்க வல்லது. இரத்த அழுத்த நோயால் வருந்துபவர்கள் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லை நீங்குவதுடன் இரத்தம் தூய்மைப்படும்.

✅கண் தொடர்பான நோய்

கண் தொடர்பான நோய்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும்.பால் சுரப்பு இல்லாத தாய்மார்களுக்கு முருங்கைக் கீரையை சமைத்துச் சாப்பிடக் கொடுத்து வந்தால் பால் சுரப்பு மிகுதிப்படும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.