தொப்பையை குறைக்க இந்த ஒரே ஒரு விதை போதும்.

பலருக்கும் இருக்கும் பெரும்பாலான பிரச்சனை உடல் எடை மற்றும் தொப்பை. இந்த பிரச்சனைகளை போக்க சியா விதைகள் போதும்.

சியா விதைகளை உட்கொள்வது உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சியா விதைகளை உட்கொள்வது எடை கட்டுப்பாட்டில் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அதை எவ்வாறு உட்கொள்வது என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம். 

உடல் எடையை குறைக்க சியா விதை

சியா விதையில் உள்ள நார்ச்சத்து, வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும் உணர்வை தரும், இதை அளவோடு சாப்பிட்டால், உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.

சியா விதைகள் உள்ள தாவர புரதம், தசைகளை வலுப்படுத்துகிறது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்கிறது. 

இந்த விதைகள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன மற்றும் உணவு பசியைக் கட்டுப்படுத்துகின்றன. உடல் எடையை குறைக்க பெரிதளவில் உதவுகின்றன.

ஆளிவிதை, குயினோவா, பூசணி விதைகள் போன்ற அனைத்து ஆரோக்கியமான உணவுகளை விட சியா விதைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது.

சியா விதைகள் உடல் எடையை கட்டுப்படுத்த சிறந்த உணவாகும். மேலும் உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. 

தினமும் 10-15 கிராம் சியா விதைகளை உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.

✅எவ்வாறு உட்கொள்வது?

1. 2 டீஸ்பூன் சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து, காலையில் சாப்பிடலாம்.

2. சியா விதைகளை சாலட் மற்றும் கஸ்டர் ஃப்ரூட்டில் போட்டு சாப்பிடலாம்.

3. சியா விதைகளை புட்டு செய்து சாப்பிடலாம்.

4. சியா விதைகளை வறுத்து பொடி செய்து சாப்பிடலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.