உறவுகள்

எப்போதெல்லாம் எதனோடெல்லாம் சந்திப்பு நிகழ்கிறதோ அப்போதெல்லாம் புது உறவுகள் மட்டுமல்ல புது உலகமே பரிணமிக்கிறது 

உறவுகள் அனைத்தும் உணர்வுகளின் சங்கமத்தில் பரிணமிக்கிறது 

அதில் சில உறவுகள் விதை போல இருக்கலாம் 

அந்த விதைக்கு ஆரம்பம் முதல் வளரும்வரை 

அரவணைப்பும் பராமரிப்பும் தேவைப்படலாம் 

அதே வளர்ந்த பிறகு தன் நன்றி உணர்வின் வெளிப்பாட்டில்  பூச்சொரிந்து பசியாற கனி கொடுத்து 

இளைப்பாற நிழல் கொடுக்கும் - விருட்சமாகி 

நம்மை தன் அன்பால் நிறைந்து இருக்க வைக்கும் 

சில உறவுகள் நம்மிடம் வந்து ஆறுதல் தேடி இளைப்பாற வேண்டிய நிலையில் இருக்கும் இன்னும் சில உறவுகள் 

நமக்கு அன்பைக் கொடுத்து 

நம்மில் ஒளிந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவதற்கு உறுதுணையாக இருந்து 

தாம் யாரென்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலே தன்னடக்கமாக இருப்பார்கள் 

இப்படி பலப்பல உறவுகளின் கூடத்தில் பயணிக்கும் நாம் 

ஒவ்வொரு உறவுகளையும் வளர்த்தும், வணங்கியும், அரவணைத்தும், வாழும்போது 

ஒவ்வொரு உறவிலும் இருக்கும் உணர்வுகளின் சங்கமம் 

நமக்கு உற்சாகத்தை கொடுப்பதோடு 

புதிய உலகத்தில் வாழக்கூடிய உற்சாக உணர்வையும் உணரச் செய்வார்கள் 

வாடகை இல்லாத வீடு...

தாயின் கருவறை 

கட்டணம் இல்லாத கல்வி....

தந்தையின் அறிவுரை 

பயம் இல்லாத பயணம்...

அண்ணனின் கரம் கோர்த்த பயணம் 

ஒளி இல்லாத நிழல்...

வாழ்க்கைத் துணையின் பந்தம் 

அளவே இல்லாத சந்தோஷம் ...

தங்கையின் அன்பு 

வெறுப்பே இல்லாத பகை... 

சகோதர உறவின் சண்டை 

கவலை தெரியாத காலம்....

நண்பர்களின் கலந்துரையாடலின் காலம் 

தினம் ஒரு குறும்படம்....

தத்தா, பாட்டியின் கதைகள் 

இப்படி அனைத்து உறவுகளிலும் உறைந்திருக்கிறது 

உணர்வுகளின் கிடங்கு  கிடங்கில் இருப்பதை கொண்டாடி உறவுகளின் உன்னதத்தை உற்சாகமாக கொண்டாடுவோம் 

ஒவ்வொரு கணமும்..

உணர்வுகள் நிறைந்த உறவின் சங்கமத்தில் ...

வாழ்க வளமுடன் நலமுடன்....


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.