மலச்சிக்கலுக்கு என்ன காரணம்? மிக எளிதான வீட்டு வைத்தியம் இதோ

மலச்சிக்கலுக்கு தூக்கமின்மை, மன அழுத்தம், தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது என பல காரணங்களை குறிப்பிடலாம்.

காலையில் எழுந்தவுடன் காலைக்கடனை கழிக்காவிட்டால் நாள் முழுதுமே வெறுப்பாக இருக்கலாம். மலச்சிக்கல் பொதுவான பிரச்சனை என்றாலும் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்யாவிட்டால் பல நோய்களும் அண்டக்கூடும்.

என்ன காரணமாக இருக்கலாம்?

உப்பு நிறைந்த உணவுகள் மற்றும் காரம் அதிகமான உணவுகளால் மலச்சிக்கல் ஏற்படலாம். 

சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படும் நபர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படலாம், தூக்கம் பாதிக்கப்படும் போது செரிமானம் மோசமாகி குடலின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.

எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு வேலை செய்வதும் காரணமாக இருக்கலாம், குறைந்தது அரை மணிநேரத்துக்கு ஒரு தடவையாவது சிறிது நடைப்பயணம் தேவை.

மன அழுத்தம், பதற்றம் போன்றவையும் மலச்சிக்கான காரணங்களே, இதனால் ஹார்மோன் சமநிலைமின்மை ஏற்பட்டு செரிமானம் பாதிக்கப்படுகிறது.

நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆக தண்ணீர் மிக அவசியம், குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடிக்கவும், இது தடைபடும் போதும் மலச்சிக்கல் உண்டாகலாம்.

✅மலச்சிக்கலுக்கான வைத்தியம்

👉பசும்பால்- ஒரு சிறிய கப்
👉பசு நெய்- 1 டீஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் பசம்பாலுடன் நெய் சேர்த்து சூடாக்கவும், இதனை இரவு உறங்குவதற்கு முன்பாக அல்லது காலை வேளையில் எடுத்துக் கொள்ளலாம். இவை இரண்டும் மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை போக்கும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.