உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்க இந்த 2 இலைகள் போதும்.

உடல் எடை அதிகரிப்பு என்பது ஆண் பெண் என இருபாலருக்கும் இடையில் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

உடல் எடை அதிகரிக்க சரியான உறக்கம் இல்லாதது, தேவையில்லாத நேரத்தில் அதிகளவு உணவு உண்பது, மன அழுத்தம், அதிகளவு மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற பல காரணங்களும் உடல் எடை அதிகரிக்க செய்யும்.

அந்தவகையில், உடல் எடையை குறைக்க உதவும் அந்த இரண்டு இலைகள் ஒன்று கறிவேப்பிலை மற்றும் ஓமவள்ளி ஆகும்.

இவை இரண்டையும் உட்கொள்வதன் மூலம், எடையை விரைவில் கட்டுப்படுத்தலாம். இதை எப்படி எடுத்துக்கொள்ளலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

📌தேவையான பொருட்கள்

👉தண்ணீர்- 2 டம்ளர்

👉கறிவேப்பிலை- 8-10

👉ஓமவள்ளி இலைகள்- 5

👉கொத்தமல்லி- 1 ஸ்பூன்

👉சீரகம்- 1 ஸ்பூன்

👉ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்

👉இஞ்சி- 1 சிறிய துண்டு

👉எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

📌செய்முறை

👉முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

👉பின் கொதிக்கின்ற தண்ணீரில் கருவேப்பிலை, ஓமவள்ளி இல்லை, கொத்தமல்லி, சீரகம், ஏலக்காய் தூள், இஞ்சி சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

👉அடுத்து ஒரு டம்ளரில் இதனை வடிகட்டி இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்து வரலாம்.

✅கிடைக்கும் பலன்கள்

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் பி2, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

இதன் நுகர்வு தோல் உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இரத்தக் குறைபாட்டைப் போக்கவும் உதவுகிறது.

அதே நேரத்தில், ஓமவள்ளி இலைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஓமவள்ளி சாறு ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மேலும், செரிமானம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் இதை உட்கொள்வதன் மூலம் குணப்படுத்த முடியும். இதில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் நன்மை பயக்கின்றன.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.