தினமும் 5- 6 நெய்யில் ஊறவைத்த பேரிச்சம்பழம் - கிடைக்கும் நன்மைகள் ஏராளம்

ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக இருக்கும் பேரீச்சை பழங்களில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் இயற்கையான இனிப்புச் சத்துக்கள் உள்ளன.

பேரீச்சை பழங்கள் துரிதமான ஆற்றலை தருகிறது மற்றும் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு பல வகைகளில் பலன் அளிப்பதாக உள்ளது.

மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கும், கொலஸ்ட்ராலை கரைப்பதற்கும் இது உறுதுணையாக அமைகிறது.

பேரிச்சம்பழத்தை நெய்யுடன் ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் வந்தடைகின்றன.

✅கிடைக்கும் நன்மைகள்

பேரீச்சை பழத்தில் ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் ஆகிய இயற்கையான இனிப்பு சத்து உள்ளது. நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் சேரும்போது, உடலுக்கு நிலையான நீடித்த ஆற்றல் கிடைக்கும்.

பேரீச்சை பழத்தில் இயற்கையான இனிப்பு சத்துக்கள் உள்ளது என்றாலும், இதில் உள்ள நார்ச்சத்து நம் குடலில் இருந்து சர்க்கரையை உடல் துரிதமாக உறிஞ்சிக் கொள்வதை தடுக்கிறது.

ஆகவே இந்த பழங்களை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு சீரான அளவில் இருக்கும். 

குடலில் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை உற்பத்தி செய்யும் திறன் நெய்க்கு உள்ளது. ஆகவே நெய் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் எளிமையாக நடைபெறும் மற்றும் மலச்சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.

நெய் மற்றும் பேரீச்சை சேர்த்து சாப்பிடுவதால் நம் மூட்டுகளுக்கு தேவையான லூப்ரிகன்ட் கிடைக்கும்.

பெண்கள் கர்ப்ப காலத்திலும், பிரசவத்திற்கு பிறகான காலத்திலும் இந்த பழங்களை நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.

நெய்யில் பேரீச்சை பழத்தை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் , உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி அடையும் என்றும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

✅எப்படி தயாரிப்பது?

10 முதல் 15 பேரீச்சை பழங்களை சுத்தமான கண்ணாடி ஜாடியில் போட்டுக் கொள்ளவும்.

கடாயில் ஒரு கப் நெய் ஊற்றி சூடு ஏற்றவும்.

நெய் கரைந்த உடன் அதில் அரை டீஸ்பூன் அளவுக்கு இலவங்கப்பட்டை பொடி, ஏலக்காய் பொடி, அஸ்வகந்தா பொடி, சுக்கு பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.

சூடான கலவையை நன்றாக கிளறிவிட்டு பின்னர் இறக்கி ஆற விடவும்.

அதை பேரீச்சை பழங்களை போட்டுள்ள ஜாடியில் ஊற்றி கலக்கி வைத்துக் கொள்ளவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.