ஒற்றை தலைவலிக்கு ஒரே தீர்வு இது தான்!

ஒற்றைத் தலைவலி என்பது ஒரு வகை தலைவலி, இது பொதுவாக தலையின் ஒரு பக்கத்தில் கடுமையான துடிக்கும் வலியை ஏற்படுத்தும்.

இது பெரும்பாலும் குமட்டல், வாந்தி போன்ற அறிகுறியுடன் இருக்கும். 

ஒற்றைத் தலைவலியானது மணிநேரம் முதல் நாட்கள் வரை நீடிக்கும். மேலும் வலி மிகவும் மோசமாக இருக்கும். அது உங்கள் அன்றாட வேலைகளை சரிவர செய்ய விடாமல் இருக்கும்.

மருந்துகள் சில ஒற்றைத் தலைவலிகளைத் தடுக்கவும், வலியைக் குறைக்கவும் உதவும். ஒற்றை தலைவியால் அவதிப்படும் நோயாளர்கள் ஏராளம். ஆகவே அவர்களுக்கான தீர்வை பற்றி தெரிந்துக்கொள்ள இந்த பதிலை தொடர்ந்து படிக்கவும்.

✅அறிகுறிகள்

குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் மற்றும் பெரியவர்களைப் பாதிக்கும் ஒற்றைத் தலைவலி நான்கு நிலைகளில் முன்னேறலாம். prodrome, aura, attack and post-drome. ஒற்றைத் தலைவலி உள்ள அனைவரும் அனைத்து நிலைகளையும் கடந்து செல்வதில்லை.

ஒற்றைத் தலைவலி வருவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டும் அறிகுறியாகும்.

👉மலச்சிக்கல்

👉மனநிலை மாற்றங்கள்

👉உணவு பசி

👉கழுத்து விறைப்பு

👉அதிகரித்த சிறுநீர்

👉அடிக்கடி கொட்டாவி 

✅மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

ஒற்றைத் தலைவலி பெரும்பாலும் கண்டறியப்படாமலும் சிகிச்சை அளிக்கப்படாமலும் இருக்கும். நீங்கள் தொடர்ந்து ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகளை கொண்டிருந்தால், வைத்தியரை நாடவும்.  

இடி போன்ற திடீர், கடுமையான தலைவலி. காய்ச்சலுடன் கூடிய தலைவலி, கழுத்து விறைப்பு, குழப்பம், வலிப்பு, இரட்டை பார்வை, உணர்வின்மை அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் பலவீனம், இது பக்கவாதத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

✅வீட்டு வைத்தியம் செய்து எப்படி தடுக்கலாம்?

👉எலுமிச்சையின் தோலை பொடியாக நறுக்கி வெயிலில் காய வைத்து பொடி செய்துக்கொள்ளவும்.  

👉அதை சூடான நீரில் குழைத்து நெற்றிக்கு பற்று போடவும். அடுத்து தேங்காய் எண்ணெயை சூடாக்கி மசாஜ் செய்யவும்.

👉கிராம்பு 5 எடுத்து சில நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து நெற்றியின் மீது பற்று போடலாம்.

👉சுக்குவை பேஸ்ட் போல் குழைத்து அல்லது வெதுவெதுப்பான நீர் விட்டு குழைத்து நெற்றி மீது தடவலாம்.

👉சந்தனத்தை அரைத்து பேஸ்ட் ஆக்கி நெற்றியில் பற்று போட்டு 20 நிமிடங்கள் காய வைக்கலாம்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.